Skip to main content

சென்னையில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு!

free coaching for competitive exams in chennai

யுபிஎஸ்சி, நீட், டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்கம் மார்ச் 31 ஆம் தேதி முதல் சென்னையில் நடைபெறுவதாக பெரியார் ஐஏஎஸ் அகாடமி தெரிவித்துள்ளது. 

டிஎன்பிஎஸ்சி மற்றும் இந்திய குடிமைப் பணி ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு தயாராக வேண்டும் என்றால் தனியார் நடத்தும் பயிற்சி மையங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.

மேலும் இதுபோன்ற போட்டித் தேர்வுகளுக்கென தனியார் தேர்வு மையங்கள் தொடர்ந்து பயிற்சி வகுப்புகள் நடத்தினாலும், அவர்கள் வசூலிக்கும் கட்டணம் மிக அதிகமாக உள்ளது.

இந்நிலையில் பெரியார் ஐஏஎஸ் அகாடமி சென்னையில் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை வருகின்ற 31ம் தேதி முதல் நடத்த உள்ளது. 

periyar coaching centre provides free coaching for upsc and tnpsc

டிஎன்பிஎஸ்சி, இந்திய குடிமைப் பணி ஆகியவை நடத்தும் அரசுப் பணித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்கம் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் மார்ச் 31-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. 

அன்றைய தினம் காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கத்தில், போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற முன்னாள் மாணவர்கள், துறை சார்ந்த அதிகாரிகள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளனர்.

இடம்: பெரியார் திடல், சென்னை
நாள்: மார்ச் 31

இதில் பங்கேற்க விரும்புவோர் 044-2661 8056, 99406 38537 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Periyar IAS Academy to give free coaching for Competitive exams like TNPSC, UPSC on March 31.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.