Skip to main content

சென்னை ஐஐடியில் நடைபெற்ற நேர்காணலில் 816 மாணவர்கள் தேர்வு!!!

சென்னை இந்திய தொழில்நுட்பக் கல்லூரி

சென்னை இந்திய தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நேர்காணலின் மூன்றாம் நாள் முடிவில், தரவு விஞ்ஞானம் மற்றும் பகுப்பாய்வு துறையில் 90 சதவீத வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நேர்காணலில் தேர்வான 816 மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் டிசம்பர் 3 ஆம் தேதி வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை இந்திய தொழில்நுட்பக் கல்லூரியில் முதல்கட்டமாக 3 நாட்கள் நடைபெற்ற வளாக நேர்காணலில், டிசம்பர் 1 முதல் 8 ஆம் தேதி வரை நேர்காணலுக்கான முதல் அமர்வு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 133 நிறுவனங்கள் இதுவரை மாணவர்களுக்கு 688 வாய்ப்புகளை வழங்கியுள்ளன. மாணவர்களிடமிருந்து 136 முன்னெடுப்பிற்கான வாய்ப்புகளை சேர்த்த பிறகு, மொத்த எண்ணிக்கை 816 ஆக அதிகரித்தது.

2017-18 கல்வியாண்டில், 106 நிறுவனங்கள் 526 வேலைவாய்ப்புகளை அளித்தன. மாணவர்களிடமிருந்து முன்னெடுப்பிற்கான வாய்ப்புகளை சேர்த்த பிறகு 643 ஆக இருந்தது. 680 வாய்ப்புகளில், 90க்கும் மேற்பட்ட தரவு அறிவியல் அல்லது பகுப்பாய்வு துறை நிறுவனங்கள் இருந்தன. இது, இத்துறையின் வலுவான வளர்ச்சியைக் குறிப்பிடுகிறது. மொத்த வேலைவாய்ப்புகளில் 33 சதவீத மதிப்பீட்டை பகுப்பாய்வு, ஆலோசனை மற்றும் நிதியியல் துறைகள் எடுத்துள்ளன. இக்கலந்தாய்வில், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மேம்பாட்டு துறைகள் 37 சதவீதம் இருந்தது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், மூன்றாம் நாள் முடிவில், வேலைவாய்ப்பு 30 சதவீதமாக அதிகரித்திருந்தது. ஆள்சேர்ப்பு நிறுவனங்களின் எண்ணிக்கையும் 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

Chennai IIT selected 816 students for jobs at various recruiting companies in Campus Interview.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.