Skip to main content

"அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்" - ஒரு அழகிய செண்ட் ஆப் விருந்து!

"அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்"

மார்வெல் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த "அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்" படம் திரைக்கு வந்துள்ளது. இப்படம் சீனாவில் நேற்று வெளியானது. அனால் இந்த படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியானது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

கதை:

"அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்" முடியும் போது வில்லன் தானோஸ் (Thanos) ஒரு சொடக்கில் உலகின் மக்கள் தொகையை பாதியாய் குறைப்பான், அதை தொடர்ந்து அவெஞ்சர்ஸும் இதையெல்லாம் விட்டு ஒதுங்கி தங்கள் குடும்பம் என வாழ ஆரம்பித்துவிடுவார்கள்.

THANOS

அந்த நேரத்தில் ஆண்ட் மேன் (Ant Man) மூலம் டைம் ட்ராவல் (Time Travel) என்ற விஷயம் இருப்பதை உயிரோடு இருக்கும் சூப்பர் ஹீரோக்கள் கண்டுப்பிடிக்க, அந்த சோதனை மூலம் கடந்த காலத்திற்கு சென்று கற்களை எடுத்து, அதை வைத்து தானோஸின் சதி திட்டத்தை தடுக்க நினைக்கின்றனர்.

அவர்கள் நினைத்தது போல் கற்களை எடுத்தார்களா? தானோஸை அழித்தார்களா? இதன் மூலம் அடைந்த லாபம், வலிகள் என்ன என்பதே மீதிக்கதை.

மார்வல் ரசிகர்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான ஒரு அழகிய செண்ட் ஆப் விருந்தாகவும், புதிதாக பார்க்கும் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாகவும் இருக்கிறது இந்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்.

Avengers Endgame Movie Review: Marvel’s Epic Infinity Saga Finale is a Triumphant Tear-Jerker

 

avenger
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.