Skip to main content

அதர்வாவின் "100": வெளியாவதில் தாமதம்!

அதர்வாவின் "100" : வெளியாவதில் தாமதம்!

நடிகர் அதர்வா மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் 100 இப்படத்தை இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கியுள்ளார்.

ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் முதன்முறையாக அதர்வா காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார்.

புரேமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் மே 9 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் வெளியீடு தள்ளிப்போயுள்ளதாக படத்தின் இயக்குநர் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் சாம் ஆண்டன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதர்வாவின் "100" : வெளியாவதில் தாமதம்!

"100 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. எங்களது இந்த படத்தை குறித்த நேரத்தில் வெளியிட முடியாததற்காக வருந்துகிறேன். இதில் என் தவறு ஏதும் இல்லை. மன்னிக்கவும். இவ்வாறு கூறியிருக்கிறார்".

ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் தயாரித்துள்ள இந்த படத்தில் யோகி பாபு, ராகுல் தேவ், ராதாரவி, ஜாங்கிரி மதுமிதா, ஆகாஷ்தீப் சய்கல், விடிவி கணேஷ், அர்ஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார். விரைவில் இப்படம் வெளியிடும் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இப்படம் முன்னதாகவே தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Release of Tamil Feature Film "100" Stayed.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.