Skip to main content

அதிபர் டிரம்ப் "என்னை நேசிக்கிறார்" - அர்னால்ட் கேலி!!!

arnold trump

ஹாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த இவர், 2003 முதல் 2011-ம் ஆண்டு வரை கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னராக இருந்துள்ளார்.

ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் என்றபோதும் டிரம்ப்புக்கும், அர்னால்டுக்கும் இடையே கருத்தியல் ரீதியாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. 

arnold and donald trump

குடியுரிமை உள்பட டிரம்பின் சர்ச்சைக்குரிய திட்டங்களை அர்னால்டு கடுமையாக விமர்சித்தார். அதே போல் டிரம்ப்பும், அர்னால்டின் கருத்துகளுக்கு பலமுறை கிண்டலாக பதிலளித்திருக்கிறார்.

இந்நிலையில் ஒரு பேட்டியில் அர்னால்டு “டிரம்ப் என் மீது காதல் கொண்டிருக்கிறார். அவர் என்னை போல் இருக்க விரும்புகிறார். இதுதான் உண்மை” என பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

Arnold Schwarzenegger says Donald Trump 'loves him and wants to be him'

Tamil