Skip to main content

அதி தீவிர புயலாக உருவெடுக்கும் ஃபானி: மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை!

fani puyal

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபானி(Fani) புயல் அடுத்த 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக உருவெடுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே தமிழகம், ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரைகளை ஒட்டி சாதகமான சூழல் இல்லை என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த புயலினால் தமிழகம் மற்றும் ஆந்திராவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

fani cyclone

ஃபானி புயல் வடமேற்குத் திசையில் 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும், ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு பிறகு வடகிழக்குத் திசை நோக்கி அது நகர ஆரம்பிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நேற்று ஃபானி புயல் சென்னையிலிருந்து 1,050 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

fani puyal

தமிழகத்துக்குப் புயல் எச்சரிக்கை கிடையாது

முன்னதாக சென்னையில் கரையை கடக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்துக்குப் புயல் எச்சரிக்கை கிடையாது எனவும், தமிழ்நாடு கடற்கரையை ஃபானி கடப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றும் சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

மே 3 ஆம் தேதி வாக்கில் இந்த ஃபானி புயல் தீவிரமடைந்து, ஒடிசாவில் மழையைப் பொழியலாம். இதையொட்டி ஒடிசா மாநில அரசு, மீட்புப் படைகளை உஷார் நிலையில் இருக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளது. 

Cyclone Fani likely to intensify into severe Cyclonic Storm today

fani cyclone

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.