Skip to main content

ஆட்சியை தக்கவைக்க குறைந்தது ஆறு இடங்களில் அதிமுக வெற்றி பெற வேண்டும்!

election

மக்களவை தேர்தலுடன் வாக்குப்பதிவு நடைபெறாமல் எஞ்சியுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு தமிழகத்தில் வரும் மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

காலியாக உள்ள 22 தொகுதிகளில், 20-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக வெல்லும் பட்சத்தில் அது அதிமுக ஆட்சிக்கு ஆபத்தாக முடியும் வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் இன்னும் இடைத்தேர்தல் நடைபெறாமல் இருக்கும் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கு நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

bypolls

தமிழகத்தில் மொத்தம் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருந்தன. நீதிமன்ற வழக்கு காரணமாக திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகள் தவிர்த்து 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18 அன்று நடைபெற்றது.

இதற்கிடையே, சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் காலமானார். இதனால், அந்த தொகுதியும் காலியானது. இந்நிலையில், காலியாக இருக்கும் 22 சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீதமுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் மே 19-ம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.

மே 23-ம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகளுடன் மேற்கண்ட 22 சட்டமன்ற தொகுதிகளுக்குமான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

election

காலியாக உள்ள 22 தொகுதிகளில், 20-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக வெல்லும் பட்சத்தில் அது அதிமுக ஆட்சிக்கு ஆபத்தாக முடியும் வாய்ப்பு உள்ளது.

ஆட்சியைத்தக்கவைத்துக்கொள்ள அதிமுக குறைந்தபட்சம் 6 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

Remaining By-election on May 19, ADMK has to win minimum of 6 constituency to retain his Government in Tamilnadu 

 tamilnadu byelection;

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.