Skip to main content

ஆஸ்திரேலிய ஓபன்: நம்பர் 1 சாம்பியனை தோற்கடித்து செரீனா வில்லியம்ஸ் காலிறுதி சுற்றுக்கு தகுதி

செரீனா வில்லியம்ஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலேப்-ஐ தோற்கடித்து செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேறினார்.

ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலிய ஓபன். கடந்த 14-ம் தேதி தொடங்கிய இப்போட்டி வரும் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரும், தரவரிசையில் 16-வது நிலையில் இருப்பவருமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், நம்பர் ஒன் வீராங்கனையான ரொமேனியாவின் சிமோனா ஹாலேப் உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

போட்டியின் ஆரம்பம் முதலே ஆக்ரோசமாக விளையாடிய செரீனா, முதல் செட்டை 6-1 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி மிரட்டினார்.

ஆனால், 2-வது செட்டை 6-4 என தனதாக்கி ஹாலேப் பதிலடி கொடுத்தார். இதனால், வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது செட் ஆட்டம் விறுவிறுப்படைந்தது.

serena and halep

கடைசி செட்டில், இருவரும் தலா 3 புள்ளிகளுடன் சமனிலையில் இருந்தனர். பின்னர், செரீனா தனது அனுபவ ஆட்டத்தால் அந்த செட்டை 6-4 என கைப்பற்றி வெற்றி பெற்றார். ஒரு மணி நேரம் 47 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் 9 ஏஸ் சர்வீஸ்களை அவர் வீசியிருந்தார்.

37 வயதான செரீனா, பல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருந்தாலும், கடந்த ஆண்டு மகப்பேருக்குப் பின் டென்னிஸ் களத்தில் பெரிய அளவிலான வெற்றியைப் பெறவில்லை.

அண்மைக்காலமாக நடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடததால் தரவரிசையில் அவர் சற்றுப்பின் தங்கிய நிலையில் இருக்கிறார்.

இதற்கு முந்தைய சுற்றுகளில் கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான கார்பின் முகுருசாவை 6-3, 6-1 என வென்ற கரோலினா பில்காவாவாவை (Czech Seventh Seed Karolina Pliskova) தனது காலிறுதி சுற்றில் செரீனா வில்லியம்ஸ் சந்திப்பார், இதில் வென்றால் மட்டுமே அவரால் அரை இறுதி சுற்றுக்குள் நுழைய முடியும்.

Australian Open: Serena Williams muscles past Simona Halep

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.