Skip to main content

ஆஸ்கர் பட்டியலில் இரண்டாம் உலகப்போர் சொல்லும் இரு படங்கள்.. இரு பார்வை!

image

இரண்டாம் உலகப் போரால் நிகழ்ந்த ஒரே நன்மை இலக்கியத்துக்கும், சினிமாத்துறைக்கும்தான். எண்ணற்ற படங்களும், சிறுகதைகளும், நாவல்களும் கடந்த அறுபது ஆண்டுகளில் பல மொழிகளிலிருந்தும் கொட்டிக்கொண்டே இருக்கின்றன. இந்த ஆண்டு ஆஸ்கரில் நான்கு விருதுகளுக்குத் தேர்வாகியிருக்கும் நெட்ஃபிலிக்ஸ் தயாரித்த மட்பவுண்ட் இரண்டாம் உலகப்போரை மையப்படுத்திய புனைவு என்றால், டன்கிர்க்கும் , டார்க்கெஸ்ட் ஹவுரும் இரண்டாம் உலகப்போரின் முக்கிய நிகழ்வுகளை மையப்படுத்தியது.

டார்க்கெஸ்ட் ஹவர்

ஜூலையில் வெளியான டன்கிர்க் , டன்கிர்க்கில் இருக்கும் போர் வீரர்களின் வெளியேற்றம் என்றால், சில மாதங்கள் கழித்து வெளியான டார்க்கெஸ்ட் ஹவர் கிட்டத்தட்ட அதன் ப்ரீக்குவல் prequel . வின்சென்ட் சர்ச்சில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் சூழ்நிலைகளை விவரிக்கிறது டார்க்கெஸ்ட் ஹவர்.  டார்க்கெஸ்ட் ஹவரின் கடைசிக் காட்சி,  வின்சென்ட் சர்ச்சில் தனது உலகப்புகழ் பெற்ற உரையை நிகழ்த்த, மக்கள் அனைவரும் தங்களிடம் இருக்கும் குட்டி குட்டி படகில் கூட, டன்கிர்க்கில் இருக்கும் வீரர்களை மீட்க செல்வார்கள். இதுதான் டன்கிர்க் படத்தின் முதல் காட்சியும் கிட்டத்தட்ட இதேதான். ஆஸ்கரில் ஆறு விருதுகளுக்குப் படம் பரிந்துரை செய்யப்பட்டிருந்தாலும், தொலைக்காட்சி தொடராக வரும் க்ரௌன் அளவுக்குக்கூட அதில் ஒரு சுவாரஸ்யமும் இல்லை. நாயகன் கேரி ஓல்ட்மேன் மட்டும் வெறித்தனமாக சர்ச்சிலாக நடித்திருந்தார். சிறந்த திரைப்பட லிஸ்ட்டில் இருக்கும் பிற படங்களுடன் ஒப்பிடுகையில் டார்க்கெஸ்ட் ஹவர் அவ்வளவு சிறப்பானதாகத் தோன்றவில்லை. அதிலும் அந்த ரயில் காட்சி , எமோஷனலாக இருந்தாலும், அதுவொரு கற்பனைக் காட்சி என்பதால் அதுவும் அடப்போங்கப்பா மோடில்தான் கடந்து செல்ல தோன்றுகிறது. 

சர்ச்சிலின் செக்ரட்டரியாக வரும் எலிசபெத் லேடனின் முதல் காட்சி மட்டும்தான் அவ்வளவு ஸ்பெஷல். முழுவதும் இருட்டாக இருக்கும் அந்தக் காட்சியில், கேரி ஓல்ட்மேன் (வின்சென்ட் சர்ச்சில்) தன் சுருட்டைப் பற்ற வைக்க, அந்த அறையில் சிவப்பு ஒளியில் வின்சென்ட் சர்ச்சிலின் முகம் தெரியும். அந்த ஒரு காட்சிக்கு வேண்டுமானால் டார்க்கெஸ்ட் ஹவரை பார்க்கலாம்.  
சற்றும் எதிர்பார்ப்பில்லாமல் வெளியான டார்க்கெஸ்ட் ஹவரின் லட்சணம் இப்படியென்றால், டன்கிர்க் இன்னும் மோசம்.

டன்கிர்க்

ஒரு படம் அதன் போஸ்டர், டீசர், டிரெய்லர் என எல்லாவற்றிலும் ஒரு ரசிகனை ஆச்சர்யமடையச் செய்ய முடியுமா? இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் என்றால் முடியும். இந்த முறை நோலன் கையில் எடுத்திருப்பது, உலக சினிமா வரலாற்றில், அதிக முறை படமாக்கப்பட்ட ஒன்று. 

எட்டு விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது டன்கிர்க். இசை சம்பந்தப்பட்ட விருதுகளைத் தவிர பிற விருதுகளை டன்கிர்க் வெல்வது கேள்விக்குறியே, ஆஸ்கர் எப்படியும் தேசப்பற்றை பெருமைப்படுத்தும் பேர்வழிகள் இல்லை என்பதால், இதுதான் முடிவாக இருக்கும். சிறந்த படமாக தி ஷேப் ஆஃப் வாட்டர், த்ரீ பில் போர்ட்ஸ் போன்ற படங்கள்தான் வாங்கும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. image

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.