Skip to main content

ஆஸ்கார் விருதுகளில் 'பிரபல திரைப்படம்' எனும் புதிய வகை விருது அறிமுகம்

ஆஸ்கார் விருது

ஆஸ்கார் விழாவில் வரும் ஆண்டு பிரபலமான படங்களை கௌரவிக்க ஒரு புதிய வகை விருதை சேர்த்துள்ளது ஆஸ்கார் அகாடமி, 2020 ஆம் ஆண்டில் நடைபெறும் மூன்று மணிநேர ஆஸ்கார் விழா தேதியை தற்போதே உறுதிப்படுத்தியுள்ளது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்பட கலை மற்றும் அறிவியல் அகாடமியின் தலைவர், ஜான் பெய்லி. புதன்கிழமை காலை அதன் உறுப்பினர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார், அதில் மூன்று முக்கிய மாற்றங்களுக்கு ஒப்புதல் பெற செவ்வாய்க்கிழமை வாரிய சந்திப்பு நடைபெற்றதாக கூறப்பட்டிருந்தது. பிரபல திரைப்பட வகைக்கான தகுதித் தேவைகள் வரவிருக்க உள்ளது.

90 வது விருதுகளுக்கான மதிப்பீடுகள், முந்தைய ஆண்டைவிட 19 சதவீதம் குறைந்து, 26.5 மில்லியன் பார்வையாளர்களாக குறைந்தது, 2008 ஆம் ஆண்டு முதல் 30 மில்லியன் பார்வையாளர்களை கொண்ட நிகழ்ச்சியாக ஆஸ்கார் விழா இருந்தது. அந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட 4 மணிநேரம் நீடித்தது. அந்த தசாப்தத்தில் நடைபெற்ற முதல் நீண்ட நிகழ்ச்சியாக அந்த விழா இருந்தது.

2019 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விழா பிப்ரவரி 24 ம் தேதி நடைபெறவுள்ளது. 2020 ஆம் ஆண்டிற்கான விழா பிப்ரவரி 9 ம் தேதி நடைபெறும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.