Skip to main content

"அரசு பள்ளிகளில் கணினி பயிற்றுவிப்பாளர் நிலை- 1" ‍- பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு!

trb recruitment

அரசு பள்ளிகளில் கணினி பயிற்றுவிப்பாளர் நிலை- 1 (முதுநிலை ஆசிரியர்) பணியிடங்களுக்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்(http://www.trb.tn.nic.in/) வெளியிடப்பட்டுள்ளது.  இந்த தேர்வின் மூலம் மொத்தம் 814 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

வயது வரம்பு:

இந்தப் பணியிடங்களுக்கு 57 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி:

கணினி  சார்ந்த பாடப்பிரிவில் முதுகலைப் படிப்புடன், B.Ed பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு கட்டணம்:

தேர்வு கட்டணமாக ரூ.500 (எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் இல்லாமல்) என நிர்ணயக்கப்பட்டுள்ளது.

எஸ்.சி, எஸ்.டி, மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 250 என நிர்ணயக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை: 

முதல் நிலையாக ஆன்லைனில் கணினி சார்ந்த தேர்வு,  இரண்டாம் நிலையாக சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும்.  ஆன்லைன் கணினி சார்ந்த தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 1:2 என்ற சுழற்சி முறையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும்.

ஊதியம்:

தேர்வில் தேர்வானவர்களுக்கு ரூ. 36,900 - ரூ. 1,16,600 வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வரும் மார்ச் 20-ஆம் தேதி முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தை  (http://www.trb.tn.nic.in/) என்ற  இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த அறிவிக்கை சார்ந்த முழு விவரங்கள் தெரிந்துகொள்ள http://www.trb.tn.nic.in/CI_2019/ci_2019.pdf பார்க்கலாம்.

Teachers Recruitment Board announces notification for Direct Recruitment for computer instructors Grade I (PG Cadre) 2019.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.