Skip to main content

அனுபவம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு மத்திய அரசில் வேலை!!!

அனுபவம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு மத்திய அரசில் வேலை!!!

மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஆணையமான, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) மென்பொருள் மேம்பாட்டாளர் (Software Developer) மற்றும் மென்பொருள் வடிவமைப்பாளர் (Software Designer) ஆகிய காலி பணியிடங்களுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

நியமிக்கப்படும் தனிநபரின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு ஆணைக்குழுவின் விருப்பத்தின் படி பணி நீட்டிக்கப்படும். ORA, SOAP, e-Admit Card, DAF, நிதி சம்பந்த மென்பொருள், பேனல் மற்றும் டேட்டா பாங்க் மென்பொருட்கள், ஆட்சேர்ப்பு விதிமுறை மென்பொருள் போன்ற பல திட்டங்கள் கையாள வேண்டும்.

கல்வி தகுதி: பொறியியல் (B.E), பி.டெக் (B.Tech) அல்லது தகவல் தொழில்நுட்பம் (IT) / கணினி அறிவியல் (Computer Science) அல்லது எம்சிஏ (MCA). 

அனுபவம்: சம்பந்தப்பட்ட துறையில் 4 அல்லது 7 வருட அனுபவத்துடன் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

கடைசி தேதி : 20-12-2018

மேலும் விபரங்களுக்கு பின்வரும் இணையதளத்தை அணுகவும்,

http://www.upsc.gov.in/sites/default/files/VC-IT-Profess-Contract-Engl.pdf

ஆர்வமுள்ள வேட்பாளர்கள் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், பான் அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை சேர்த்து பரிந்துரைக்கப்படும் விண்ணப்பப்படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 20, 2018 ஆகும்.

UPSC To Recruit Experienced IT Professionals

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.