Skip to main content

அண்ட்ராய்டு பயன்பாட்டின் பீட்டா பதிப்பில் வாட்சப் கைரேகை அங்கீகார அம்சம்!

whatsapp

வாட்சப் அதன் அண்ட்ராய்டு பீட்டா பயன்பாட்டை பதிப்பு 2.19.83 க்கு மேம்படுத்தியுள்ளது, அதில் ஒரு புதிய அங்கீகரிப்பு அம்சத்தின் தடய வசதிகள் காணப்பட்டன.

வாட்சப் இந்த ஒரு சிறப்பம்சத்தில் பணியாற்றி வருகிறது, சமீபத்திய புதுப்பிப்புகளால் வாட்சப் செயலி நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளது.

பீட்டா டிராக்கர் WABetaInfo அமைப்புகளில் Authentication அம்சம் எவ்வாறு செயல்பட முடியும் என்பதை காட்டும் திரைக்காட்சிகளையும், இதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதைக் காட்டும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

whatsapp fingerprint

துரதிர்ஷ்டவசமாக, இந்த அம்சம் இயல்பு நிலை வாட்சப்பில் முடக்கப்பட்டுள்ளது, எனவே பீட்டா பயனர்களுக்கு இது இன்னும் இயங்காது. 

கண்காணிப்பு அங்கீகரிப்பு அம்சம், வாட்சப் பயனர்கள் தங்கள் கணக்கை அவரவர் கைவிரல் ரேகை சென்சார் கொண்டு மூடவும், திறக்கவும் அனுமதிக்கும்.

இந்த அம்சம் இயக்கப்பட,

Settings >Account >Privacy > Use Fingerprint to Unlock. 

ஒருமுறை இயக்கப்பட்டவுடன், வாட்சப் உங்கள் கைரேகையை பதிவு செய்யும்.

பின்னர் நீங்கள் பயன்பாட்டை விட்டுவிட்டு பிறகு எப்போது செயலியை உங்கள் கைரேகை சென்சார் கொண்டு மூடவேண்டும் என்பதற்கான நேரம் வழங்கப்படும். அதில் 1 நிமிடம் கழித்து, 10 நிமிடங்களுக்கு பிறகு / அல்லது 30 நிமிடங்களுக்கு பிறகு என்று நீங்கள் உங்கள் விருப்பத்தை செய்துகொள்ளலாம்.

WhatsApp Fingerprint Authentication Feature Spotted on Beta Version of Android App

whatsapp fingerprint

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.