Skip to main content

ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கரையை கடந்தது "பெத்தாய் புயல்"

பெத்தாய் புயல்

ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் கொனசீம பிரதேசத்தில் காட்ரீனிகோவுக்கு அருகே கடலோரப் பகுதியில் புயல் டிசம்பர் 17 மதியம் ௧ மணிக்கு பெத்தாய் புயல் கரையைக் கடந்தது.

இந்த புயலின் காரணமாக, ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்தது. மரங்கள் வேரோடு பெயர்த்து வீசப்பட்டன. மேலும், மின் இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

electric pole

 

கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆந்திராவின் 7 கடலோர மாவட்டங்களில் தாழ்வான பகுதியில் உள்ள 20 , 000 மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளை ஆந்திர அரசு செய்து கொடுத்துள்ளது. ஒவ்வொரு கடலோர மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களில் தகவல் மையம் அமைக்கப்பட்டிருந்தது.

கிழக்கு கோதாவரி பகுதியில் காட்ரீனிகோனா, தாலரேவூ மற்றும் மல்கிபாளம் ஆகிய இடங்களில் 85-90 கி.மீ. தூரத்திற்கு மின்சார கம்பங்கள் மற்றும் மரங்கள் தூக்கி வீசப்பட்டன. எனினும், விபத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லை.

Heavy rain

 

மீட்பு நிவாரண பணிகளை பார்வையிடுவதற்காக, துணை முதல்வர் என்.ஜி.ஜி ராஜப்பா, கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பைரவாபலேம் கிராமத்தில் முகாமிட்டுள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50 ரயில் சேவைகளை தெற்கு மத்திய ரயில்வே நேற்று ரத்து செய்தது.

விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு வந்த விமானங்கள் ஹைதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன. நேற்று காலை முதல் மாலை 5 மணி வரை விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் எந்த விமானமும் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை.

டிசம்பர் 17 காலை விசாகப்பட்டினத்தில் தரையிறங்கவிருந்த இண்டிகோ விமானம் பெங்களூரிலிருந்து ஹைதராபாத்திற்கு திருப்பி விடப்பட்டது.

விசாகப்பட்டினத்தில் இருந்து ஹைதராபாத் செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மீண்டும் அனுப்பப்பட்டது. அதே நேரத்தில், புதுடில்லியிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் தெலுங்கானா தலைநகருக்கு திருப்பி விடப்பட்டதாக விசாகப்பட்டினம் விமான நிலைய இயக்குனர் தெரிவித்தார்.

ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

Trees

 

விஜயவாடா நகரில் கடுமையான மழை பெய்ததால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்தார். விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் சுவர் இடிந்து விழுந்தது மற்றும் மரங்கள் சாய்ந்த சம்பவங்களில் இதுவரை 7 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது. காக்கிநடாவிலிருந்து விசாகப்பட்டினம் கடற்பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற 6 மீனவர்களை காணவில்லை. அவர்கள் காற்றின் திசையில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

புயல் பாதிப்பு குறித்து ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுடன் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.

உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு உடனடி நிவாரண நிதியாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. விசாகப்பட்டினம், கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2 நாட்கள் தங்கி, மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளைப் பார்வையிட உள்ளார்.

புயல் காரணமாக ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் விசாகப்பட்டினம், காகுளம், விஜயநகரம், குண்டூர், கிருஷ்ணா, கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் விவசாயப் பயிர்கள் நாசம் அடைந்தன. இதில் கிருஷ்ணா மாவட்டத்தில் மட்டும் 12 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் நாசமடைந்ததாக கூறப்படுகிறது.

 

Crops Damage

 

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினரோடு, கடற்படை ஹெலிகாப்டர் மற்றும் 10 ஆயிரம் அரசு பணியாளர்களும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, ஆந்திரா மற்றும் ஒடிசா அரசுகள் தெரிவித்துள்ளன.

Cyclone Phethai hit the coast near Katrenikona in the Konaseema region of East Godavari district of

Andhra Pradesh at 1 p.m. on December 17.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.