Skip to main content

அனந்த்நாக் தாக்குதல் 5 வீரர்கள் பலி: அல் உமர் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு!

அனந்த்நாக் தாக்குதல்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவத்தினர் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு படை நடத்திய பதிலடியில் தீவிரவாதிகளில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் போது காவல்துறை இன்ஸ்பெக்டர் மற்றும் பொதுமக்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 

அனந்த்நாக் மாவட்டத்தின் கே.பி. சாலையில், தீவிரவாதிகள் 2 பேர் துணை ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆட்டோமேட்டிக் மெஷின் துப்பாக்கிகள் இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டன. மேலும் அவர்கள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. 

அனந்த்நாக் தாக்குதல்

இந்த சம்பவத்தில் துணை ராணுவத்தினர் 5 பேர் உயிரிழந்தனர். அனந்த்நாக் காவல் நிலைய அதிகாரி அர்ஷத் அகமது தீவிரவாதிகளின் தாக்குதலில் காயம் அடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அல் உமர் முஜாஹிதீன் உள்ளூர் தீவிரவாதிகள் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு பொறுப்பேற்றுள்ளனர்.

Anantnag attack: 5 CRPF jawans, 1 terrorist killed; Al Umar Mujahideen claims responsibility

அனந்த்நாக் தாக்குதல்

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.