Skip to main content

ஆன்லைன் வழி கல்வியே சிறந்த கற்றல் முறை - துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு!

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு!

இணையத்தளத்தின் மூலம் நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் அடையக்கூடும் என்பதால், ஆன்லைன் கல்வி என்பது சிறந்த கல்வி முறையாகும் என்று துணை ஜனாதிபதி எம். வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் இன்று ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெற்ற இந்திரா காந்தி தேசிய தொலைதூர பல்கலைக்கழகத்தின் (Indira Gandhi National Open University, IGNOU) 32 வது மாணவர் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய துணை ஜனாதிபதி இணைய வழி கல்வி எழுத்தறிவு விகிதங்கள் அதிகரிக்க உதவியாக உள்ளது என்றார்.

இந்திரா காந்தி தேசிய தொலைதூர பல்கலைக்கழகம் பல கற்கும் மாணவர்களுக்கு அறிவூட்டலை வழங்கியுள்ளது.

தினசரி கல்லூரிகளுக்கு சென்று மேற்படிப்பை பயில முடியாத மாணவர்களுக்கு இந்த பல்கலைக்கழகம் பெரும் உதவியை செய்துள்ளது என்றார்.

vice president venkaiah naidu

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் இந்திய இராணுவம், கடற்படை மற்றும் அசாம் ரைபிள் போன்ற பாதுகாப்பு படைகளுக்கு தனித்தனியாக 11 பிராந்திய மையங்களை அமைத்துள்ளது என்று துணை ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்த தொலைதூர கல்வி நிலையத்தில், பாதுகாப்பு படைகளின் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் தங்கள் படிப்பை தொடரலாம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நாடுமுழுவதிலும் இருந்து வந்த இந்த பல்கலைக்கழகத்தின் 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு திரு வெங்கையா நாயுடு பட்டம் வழங்கினார்.

Vice President Mr. Venkaiah Naidu describes online education as the best mode of learning

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.