Skip to main content

அமமுக தேர்தல் அறிக்கை: ஏழை மாணவிகளுக்கு ஆண்டுக்கு 10,000 உதவித்தொகை!

election manifesto of ammk

வருகின்ற மக்களவை தேர்தலில் தனித்து களமிறங்கும் அம்மா மக்கள் முன்னேற்றேக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன், இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று மார்ச் 22 ஆம் தேதி காலை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து தற்போது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அனைத்து விவசாயக் கடன்களும் தள்ளுபடி. கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து சிறு வணிக கடன்களும் தள்ளுபடி.

விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை.

டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்.

தஞ்சாவூரில் தேசிய வேளாண் பயிர் காப்பீட்டு நிறுவனம் அமைக்கப்படும்.

ஜி.எஸ்.டி கவுன்சில் நிர்வாகத்தில் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.

விவசாயத்திற்கு இலவச ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும்.

dmk manifesto

பேரிடர் மறுவாழ்வு ஆணையம் நிரந்தரமாக அமைக்கப்படும்.

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை.

மாணவர்கள் நல ஆணையம் அமைக்கப்படும்.

மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும்.

கல்லூரி வளாகங்கள் அனைத்திற்கும் இலவச வை-ஃபை வசதி, கல்லூரி
மாணவர்களுக்கு இலவச கையடக்க கணினி (Tab).

ஏழை கல்லூரி மாணவிகளுக்கு ஆண்டு ரூ.10,000 கல்வி உதவி
தொகை.

village

நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை.

ஆசிரியர் தகுதி தேர்வு முறையில் மாற்றம் அல்லது ரத்து.

பொறியியல் பட்டதாரிகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம்.

ஆறு இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள்.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் 100 ரூபாய் மானியம்.

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு குடியிருப்பு வசதி.

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு.

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வீட்டு வசதி.

tamils

தனியார் நிறுவன ஊழியர்களின் திருமண செலவுகளுக்கு ரூ. 2 லட்சம் வட்டியில்லா கடன்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வலியுறுத்தப்படும்.

கச்சத்தீவை திரும்பப்பெற சட்ட நடவடிக்கை.

வயது முதிர்ந்த ஆண் பெண் விவசாயத் தொழிலாளர்கள், நெசவாளர்கள், மீனவர்கள் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.4000 உதவித்தொகை.

தமிழகத்திற்கு என தனி செயற்கைக்கோள் ஏவப்படும்.

AMMK Election Manifesto 2019.

satellite

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.