Skip to main content

அமெரிக்கா-சீனா வர்த்தகப்போர்: மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை!

அமெரிக்கா-சீனா வர்த்தகப்போர்

அமெரிக்க அதிகாரிகள் பிப்ரவரி 14,15 ஆகிய தேதிகளில் சீனாவுடன் வர்த்தக போர் தொடர்பான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்று வெள்ளைமாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன.

பேச்சுவார்த்தைகளின் படி ஒப்பந்தங்கள் மார்ச் 1 ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் என்றும் அதன்பின் அமெரிக்கா 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு இரண்டு மடங்காக கட்டணங்களை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் வர்த்தக பிரதிநிதி ராபர்ட் மற்றும் செயலாளர் ஸ்டீவன் கலந்து கொள்வார்கள் என்றும், மேலும் அதிபர் ட்ரம்ப்பால் உலக வங்கி தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட டேவிட் மல்பாஸ் ஆகியோரும் கலந்து கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனினும் வெள்ளை மாளிகையின் சீன விமர்சகர் பீட்டர் நவரோ இந்த அணியில் இடம்பெறவில்லை.

சர்வதேச வர்த்தகத்தை கருத்தில் கொண்டு இந்த பேச்சு வார்த்தையில் சுமூக முடிவுகள் எட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த பேச்சுவார்த்தை முடிவதற்கு முன்பு சீன பிரதமர் ஜி ஜிங்பிங்கை சந்திப்பதில்லை என்று கூறியிருந்தார். 

இறுதி முடிவுக்கு பின்னரே சந்திப்பு குறித்து தகவல்கள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சீனாவிடம் மிகப்பெரிய மாற்றங்களை விரும்புவதாக வாஷிங்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமையும் அடங்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட எஃகு மற்றும் அலுமினிய பொருட்களின் மீது பாரிய சுங்க வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுமத்தியதில் இருந்து, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் வர்த்தகப் போர் ஆரம்பமானது.

அமெரிக்காவை பழி வாங்கும் நடவடிக்கையாக, பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அமெரிக்க இறக்குமதி மீது சீனா வரி விதித்து தகர்த்தது.

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகத் தடையானது, நாட்டிலுள்ள உள்நாட்டு தயாரிப்பாளர்களை பாதுகாப்பதற்கும், உலகளாவிய பொருளாதாரத்தின் மீது "பாரிய" தாக்கம் குறைவாக இருக்கும் என்று ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்கு சீன ஏற்றுமதிகளில் 250 பில்லியன் அமெரிக்க டாலரில், ஆறு சதவீதம் மட்டுமே அமெரிக்க நிறுவனங்களால் எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் அபிவிருத்தி பற்றிய ஐக்கிய நாடுகள் மாநாட்டில் (UNCTAD) தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் அமெரிக்க ஏற்றுமதியில் சுமார் 85 பில்லியன் அமெரிக்க டாலர் சீனாவின் கட்டணத்திற்கு உட்பட்டது, இதில் சீன நிறுவனங்களால் வெறும் 5 சதவிகிதம் மட்டுமே எடுக்கப்படும் என ஐக்கிய நாடுகள் மாநாடு தெரிவித்தது.

அமெரிக்காவும் சீனாவும் மார்ச் 1 ம் தேதிக்குள் தங்கள் கட்டண விவாதத்தை கைவிட ஒப்புக் கொள்ளாவிட்டால், ஒவ்வொரு நாட்டின் பொருட்களின் வரி தற்போதைய 10 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதம் உயரும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

The US-China trade war: US to talk with China says White House

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.