Skip to main content

அமெரிக்க பிரதிநிதிக்களுக்கான இடைத்தேர்தல்- ‍ட்ரம்பின் குடியரசுக்கட்சி சரிவு

அமெரிக்க பிரதிநிதிக்களுக்கான இடைத் தேர்தல்- ‍ட்ரம்பின் குடியரசுக்

அமெரிக்காவில் பிரதிநிதிக்களுக்கான இடைத் தேர்தலில்  ட்ரம்பின் குடியரசுக் கட்சி சரிவை சந்தித்துள்ளது. ஆனால் செனட் சபையை ட்ரம்பின் குடியரசுக் கட்சி தக்க வைத்துள்ளது.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் இடைத் தேர்தல் நடத்து முடிந்துள்ளது. 

இருகட்சி ஆட்சி முறை நடைபெற்று வரும் அமெரிக்காவில் கீழவை, மேலவை என இரு அவைகள் இருக்கின்றன. இவை முறையே செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை என்று அழைக்கப்படுகின்றன. 

செனட் சபையில் 100 உறுப்பினர்களும், பிரதிநிதிகள் சபையில் 435 உறுப்பினர்களும் உள்ளனர். இந்நிலையில் 435 உறுப்பினர்களுக்கான பதவிக் காலம் விரைவில் முடிவடைய உள்ளது. 

இதையொட்டி பிரதிநிதிகள் சபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் வழக்கமாக அதிபர் தேர்தல் உடன் சேர்த்து நடத்தப்படும். ஆனால் இம்முறை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்டதால், இடைக்கால தேர்தல் என்று ஊடகங்கள் குறிப்பிட்டு வருகின்றன. 

பிரதிநிதிகள் சபை தேர்தலுடன், 35 செனட் உறுப்பினர்கள் மற்றும் 36 மாநில ஆளுநர்களுக்கான தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் அந்நாட்டு மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். 

இதன் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற உடன், வாக்கு எண்ணிக்கை பணிகள் தொடங்கின. தேர்தல் முடிவுகளின் படி, பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை பெற்றுள்ளது. 

இது டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு பின்னடைவாகும். ஆனால் செனட் சபையில் குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது. 

வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை நடந்து முடிந்தது. நடந்து முடிந்த இடைத் தேர்தலில்களில் இம்முறைதான் அதிக அளவிலான எண்ணிக்கையில் வாக்கு பதிவு நடந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போதையை எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரம்படி, ஜன நாயக கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதுடன் வெர்ஜினியா, புளோரிடா போன்ற மாகணங்களில் வெற்றியும் பெற்றுள்ளது.

அமெரிக்காவில் சமீப காலமாக நடந்த கலச்சார பிரச்சனை, இனவெறி, குடியுரிமை பிரச்சனைக் போன்றவை காரணமாக ட்ரம்பின் மீதும் அவரது குடியரசுக் கட்சி மிதும் எழுந்த விமர்சனங்களுக்கு பதிலாக இந்த பிரதிநிதிகளுக்கான இடைத் தேர்தலில்  ட்ரம்பின் குடியரசுக் கட்சி சிறிய சரிவைச் சந்தித்துள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் பலரும் விமர்சித்துள்ளன.

U.S. Midterm Elections, GOP keeps Senate control for 2 more years

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.