Skip to main content

அமேசான் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளில் வெளியான 540 மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் பதிவுகள் நீக்கம்!

பேஸ்புக் பதிவுகள் நீக்கம்

அமேசானின் கிளவுட் சர்வெர்களில் பொதுப்படையாக சேமிக்கப்பட்டு இருந்த பல லட்சம் பயனரின் தனிப்பட்ட தகவல்களை அதிரடியாக நீக்கியதாக முகநூல் நிறுவனம் அறிவித்துள்ளது. 

சைபர் செக்யூரிட்டி நிறுவனமான அப்கார்டு முதலில் இதுபற்றிய தகவல்களை வெளியிட்டது. இந்நிறுவனம் வெளியிட்ட தகவல்களில் மெக்சிகோ சார்ந்த செய்தி வலைதளம் ஒன்று பேஸ்புக் பயன்படுத்தும் சுமார் 54 கோடி பேரின் விவரங்களை அமேசானின் கிளவுட் சர்வெர்களில் பொதுவாக சேமித்து வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

facebook

இந்த தகவல்களில் பயனர்களின் அலைபேசி எண்கள், கமென்ட்கள், ரியாக்‌ஷன்கள் மற்றும் அக்கவுண்ட் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாக அப்கார்டு தெரிவித்தது.

மற்றொரு தகவல்களில் அட் தி பூல் எனும் செயலி பயனரின் பெயர்கள், மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் உள்ளிட்டவற்றை அம்பலப்படுத்தியதாக அப்கார்டு தெரிவித்திருக்கிறது.

இத்தகவலைத் தொடர்ந்து அமேசான் சர்வெர்களில் இருந்த தகவல்களை முகநூல் நிறுவனம் அதிரடியாக நீக்கிவிட்டதாக தெரிவித்துள்ளது. 

பயனர் விவரங்களை நீக்க அமேசானுடன் இணைந்து பணியாற்றியதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

fb

பேஸ்புக் தகவல்கள் பொது தளங்களில் சேமிப்பது பேஸ்புக் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.

சமீப காலங்களில் பயனர் தகவல்களின் பாதுகாப்பு சார்ந்து பேஸ்புக் நிறுவனம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

கடந்த ஆண்டு கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் பேஸ்புக் ப்ரோபைல்களில் இருந்து தகவல்களை ரகசியமாக சேகரித்தது அம்பலமானது இது அந்நிறுவனத்திற்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது.

More than 540 million records about Facebook users were publicly exposed on Amazon's cloud computing service

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.