Skip to main content

அமைதியாக நடந்து முடிந்தது இரண்டாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல்!

இரண்டாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல்!

உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல், 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

முதல் கட்ட தேர்தல் 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் கடந்த 11-ந் தேதி நடந்தது.

ஏப்ரல் 18 ம் தேதி 2-வது கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 95 பாராளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலுக்கான முடிவுகள் மே 23-ம் தேதி அறிவிக்கப்படுகின்றன.

முதற்கட்டத் தேர்தல்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

2-வது கட்ட மக்களவை தேர்தல் - ஏப்ரல் 18 - மொத்தம் 95 தொகுதிகள் 

1. அசாம் - 5 தொகுதிகள்
2. பிகார் - 5 தொகுதிகள்
3. சத்தீஸ்கர் - 3 தொகுதிகள்
4. ஜம்மு காஷ்மீர் - 2 தொகுதிகள்
5. கர்நாடகா - 14 தொகுதிகள்
6. மகாராஷ்டிரா - 10 தொகுதிகள்
7. மணிப்பூர் -  1 தொகுதி
8. ஒடிசா - 5 தொகுதிகள்
9. தமிழ்நாடு - 38 தொகுதிகள் 
10. உத்தர பிரதேசம் - 8 தொகுதிகள்
11. மேற்கு வங்கம் - 3 தொகுதிகள்
12. புதுச்சேரி - 1 தொகுதி

2-வது கட்ட மக்களவை தேர்தல்

இந்த நிலையில் தமிழ்நாட்டில் 38, புதுச்சேரியில் 1, கர்நாடகத்தில் 14, மராட்டியத்தில் 10, உத்தரபிரதேசத்தில் 8, அசாம், பீகார், ஒடிசாவில் தலா 5, சத்தீஷ்கார் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 3, காஷ்மீரில் 2, மணிப்பூரில் ஒரு தொகுதி என மொத்தம் 95 நாடாளுமன்ற தொகுதிகள் நேற்று இரண்டாம் கட்ட தேர்தலை சந்தித்தன.

இந்த தேர்தலில் மொத்தம் 15 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றிருந்தனர். அவர்கள் வாக்களிப்பதற்காக 1 லட்சத்து 81 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழ்நாட்டில் 18 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இதேபோன்று, ஒடிசா சட்டசபை தேர்தலில் 2-ம் கட்டமாக 35 தொகுதிகளிலும் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. இந்த தேர்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் நாடு முழுவதும் இரண்டாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்தது.

2nd Phase Loksabha election held peacefully in 11 states and one UT on April 18 

இரண்டாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல்!

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.