Skip to main content

அழிந்து வரும் சிட்டுக்குருவிகள்: மனித இனத்தின் அழிவுக்கான முதல் படி!

அழிந்து வரும் சிட்டுக்குருவிகள்

சிட்டுக்குருவி மட்டுமல்ல இந்த உலகில் எந்த ஒரு உயிரினம் முழுவதுமாக அழிந்தாலும், அது மனித இனத்தின் அழிவுக்கான முதல் படி என்பதை நாம் என்றுமே மறக்கக் கூடாது.

நகர்ப்புறங்களில் காணப்படும் பொதுவான பறவை இனங்கள் மத்தியில் கடந்த பத்து வருடங்களில் சிட்டுக்குருவியின் எண்ணிக்கை சீராக குறைந்து வருகிறது.

2012 ஆம் ஆண்டு முதல் சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை விகிதம் சற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக டெல்லி உள்ள சேரிப்பகுதிகளில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

இந்தியாவின் பறவை மனிதர்:

இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களும் இந்த உலகில் வாழும் உரிமையை பெற்றுள்ளன. ஆனால், மனிதனின் சுயநலத்துக்காக மிருகங்களையும், பறவை இனங்களையும் அழித்து வருகிறோம்.

ஒரு சிட்டுக் குருவியை விளையாட்டுத்தனமாகக் கொன்ற சலீம் அலி, அதனால் தனது வாழ்க்கையையே பறவைகளுக்காக அர்பணித்து இந்தியாவின் பறவை மனிதர் ஆனார்.

sparrow day

பஞ்சம் காரணமாக 1.5 கோடி சீனர்கள் பலி

சீன நாட்டில் பயிர்கள் அழிய சிட்டுக் குருவிகளும் ஒரு காரணம் என கோடிக்கணக்கில் அதனை அழிக்க 1958-ம் ஆண்டு மாவோ உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் கோடிக்கணக்கான சிட்டுக் குருவிகள் கொடூரமாக கொல்லப்பட்டன.

இதனால், அடுத்த ஆண்டு விளைச்சல் அதிகரிக்கும் என்று பார்த்தால், அதற்கு மாறாக வெட்டுக்கிளிகளின் இனம் பெருகி விளைச்சல் பாதியாக குறைந்தது.

இதனால், அங்கு ஏற்பட்ட பஞ்சம் காரணமாக 1.5 கோடி சீனர்கள் பலியாகினர் என சீன அரசு தெரிவித்தது.

sparrow2

ஆனால், தி டாம்ப்ஸ்டோன் புத்தகத்தில் 3 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொன்று இறந்ததாகவும், பசியின் கொடுமையால், மக்கள் நரமாமிசம் சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால், அந்த புத்தகம் சீன அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

சிட்டுக் குருவி தானே என சாதாரணமாக எண்ணாமல் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில், செல்போன் சிக்னல்களால் அந்த இனம் அழிந்து வருவதை 2.0 என ரஜினி, அக்‌ஷய்குமாரை வைத்து படமாக்கியிருந்தார் இயக்குனர் சங்கர்.

இன்று மார்ச் 20 ஆம் தேதி உலகம் முழுவதும் சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவியின் தேவையை உணர்ந்த ஐ.நா, 2010-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதியை உலக சிட்டுக்குருவி தினமாக அறிவித்தது.

sparrow

டெல்லி அரசு கடந்த 2012-ம் ஆண்டு சிட்டுக்குருவியை தங்கள் மாநில பறவையாக அங்கீகரித்தது.

சிட்டுக்குருவிக்காக நம்மால் பெரிதாக ஏதும் செய்ய முடியாவிட்டாலும், இந்தக் கோடை காலத்தில் வீட்டிற்கு வெளியிலோ அல்லது மாடியிலோ, சிறிது தண்ணீர் மற்றும் தானியங்கள் வைத்தால் போதும்.

சிட்டுக்குருவி மட்டுமல்ல இந்த உலகில் எந்த ஒரு உயிரினம் முழுவதுமாக அழிந்தாலும், அது மனித இனத்தின் அழிவுக்கான முதல் படி என்பதை நாம் என்றுமே மறக்கக் கூடாது.

World Sparrow Day 2019: Where Are All the Sparrows in India Gone 

sparrow

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.