Skip to main content

அஜித்தின் 59 வது படம்: "நேர்கொண்ட பார்வை" First Look வெளியீடு!

நேர்கொண்ட பார்வை

பாலிவுட்டில் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சூப்பர் ஹிட்டான "பிங்க்" படம், தமிழில் அஜித் நடிப்பில் "நேர்கொண்ட பார்வை" என்ற தலைப்பில் உருவாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் முதல் பார்வை "First Look" நேற்று வெளியிடப்பட்டது.

"சதுரங்க வேட்டை" மற்றும் "தீரன் அதிகாரம் ஒன்று" படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ள நிலையில் டிசம்பர் 14 ஆம் தேதி இந்தப் படத்தின் பூஜை நடைபெற்றது.

பாலிவுட்டில் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சூப்பர் ஹிட்டான "பிங்க்" படத்தைத்தான் தமிழில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித் நடிப்பில் ஏற்கெனவே வெளியான "பில்லா", "மங்காத்தா" மற்றும் "ஆரம்பம்" படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

பாலிவுட் "பிங்க்" படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை. எனவே, இந்தப் படத்திலும் பாடல்கள் இருக்காது என்கிறார்கள். ஒருவேளை அஜித் ரசிகர்களுக்காகத் தமிழில் சில மாற்றங்களைச் செய்து பாடல்களைச் சேர்க்கவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Presenting Ajith Kumar In The First Look Of Pink Tamil Remake, Now Called Nerkonda Paarvai

nerkonda parvai நேர்கொண்ட பார்வை"

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.