Skip to main content

"ஐரா"வின் வதம் ‍எத்தகையது? - திரை விமர்சனம்!

airaa movie

நடிகர்கள்: நயன்தாரா, கலையரசன்,யோகி பாபு, ஜெயப்பிரகாஷ், மீரா கிருஷ்ணன்
இயக்கம்: சர்ஜூன் கே.எம்
ஒளிப்பதிவு: சுதர்சன் சீனிவாசன் 
இசை: கே.எஸ்.சுந்தரமூர்த்தி

ஊ டகத் துறையில் பணிபுரியும் நயன்தாராவுக்கு யூ-டியூப் சேனல் ஆரம்பித்து பிரபலமாக வேண்டும் என்பது ஆசை.

இந்நிலையில் திருமணம் செய்து வைக்க விரும்பும் பெற்றோரிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக அவர் பொள்ளாச்சியில் உள்ள பாட்டி வீட்டுக்குச் செல்கிறார்.

airaa

பாட்டியின் பங்களா வீட்டில் பாட்டிக்கு உதவியாக இருக்கும் யோகி பாபுவுடன் சேர்ந்து போலியான திகில் காட்சி செட் அப் செய்து, அந்த வீடியோக்களை யூ-டியூப் சேனல் வழியே ரிலீஸ் செய்கிறார். பிரபலமும் ஆகிறார்.

திடீரென அந்த பங்களா வீட்டில் நிஜமாகவே பேய் வந்து நயன்தாராவுக்குக் குறி வைக்கிறது. பாட்டியையும் அடித்துப் போடுகிறது.

மற்றொருபுறம், சென்னையில் நாயகன் கலையரசனைச் சுற்றி வசிக்கும் சில நபர்கள் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள்.

 

airaa

ஏன் இப்படி தொடர்ச்சியாக மர்ம மரணங்கள் நடக்கின்றன? இதில் நயன்தாராவுக்கு என்ன தொடர்பு? இதெல்லாம்தான் ‘ஐரா’ படத்தின் மீதிக் கதை.

முதன்முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்திருக்கும் திரைப் படம் இது.

வித்தியாசத்தை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதிலும், கருப்பு நிற நயன்தாரா கிராமத்து பயம், கூச்சத்துடன் குறுகி நடிக்கும் காட்சிகளில் அசத்திவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

"மா", "லட்சுமி" குறும்படங்களின் வழியே கவனத்தை ஈர்த்த சர்ஜூன் கே.எம் இயக்கியுள்ள இப்படத்தில் முழுக்க திகில் விஷயங்கள் நிரம்பியிருந்தாலும் பழி தீர்த்தலுக்கான காரணங்களை உரிய அழுத்தத்தோடு சொல்லாமல் திரைக்கதை நகர்வதால் படபடப்பைவிட சோர்வே அதிகம் வருகிறது. 

Airaa Movie Review

airaa
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.