Skip to main content

ஐபிபிஎஸ் புரொபஷனெரி அதிகாரி பணியின் தேர்வு முடிவுகள்

வேலைவாய்ப்பு

நடப்பாண்டிற்கான புரொபஷனெரி அதிகாரி பணிகள் 2018 முதற்கட்ட தேர்வுகள், கடந்த அக்டோபர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டன. இதன் முடிவுகள் அக்டோபர் 30ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இந்த வாரத்திலேயே புரொபஷனெரி அதிகாரி பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப ஐபிபிஎஸ் எனப்படும் அமைப்பு, கடந்த 1975 ஆம் ஆண்டு முதல், வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டு, பல்வேறு கட்டத் தேர்வுகள் நடத்தி காலி பணியிடங்களை நிரப்பி வருகிறது. எஸ்.பி.ஐ வங்கிக்கு மட்டும் ஆட்கள் தேர்வு செய்யப்படாது.

இந்நிலையில் நடப்பாண்டிற்கான புரொபஷனெரி அதிகாரி பணிகள் 2018 முதற்கட்ட தேர்வுகள், கடந்த அக்டோபர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டன. 

இதன் முடிவுகள் அக்டோபர் 30ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இந்த வாரத்திலேயே புரொபஷனெரி அதிகாரி பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனை https://ibps.in/ என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். இதில் தேர்வாகும் நபர்கள், ஐபிபிஎஸ் பி.ஓ முதன்மை தேர்வை எழுதலாம். இந்தத் தேர்வு வரும் நவம்பர் 18ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான அட்மிட் கார்டுகளை சம்பந்தப்பட்ட இணையளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவை வரும் நவம்பர் 3 ஆம் தேதி முதல் இணையத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

IBPS PO Preliminary exam results are expected this week

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.