Skip to main content

ஐபிஎல் தோல்விக்கு பேட்ஸ்மேன்களே காரணம் ‍- தோனி வருத்தம்!

csk runnerup

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்று மே 12 ஆம் தேதி நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது. 

தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி அளித்த பேட்டியில் கூறியதாவது:-  

"ஒரு அணியாக இந்த தொடர் சென்னை அணிக்கு சிறப்பாக இருந்தது. ஆனால், இந்த தொடரில் நாங்கள் கடந்த ஆண்டுகளைப் போல மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு வரவில்லை.

dhoni

மிடில் ஓவர்களில் எங்கள் ஆட்டம் சிறப்பாக அமையவில்லை. இன்று இரண்டு அணிகளும் நிறைய தவறுகளை செய்தோம். 

ஆனால் எங்களை விட மும்பை அணி குறைவான தவறுகளை செய்ததால் வெற்றி பெற்றார்கள். எங்களது அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். இந்த மைதானத்தில் 150 ரன்கள் என்பது கண்டிப்பாக எட்டக்கூடிய இலக்கு தான்.

csk

இதுபோன்ற குறைவான இலக்கில் இறுதிப்போட்டியில் எதிரணியை சுருட்டுவது என்பது கடினம். ஆனால் எங்களது பந்து வீச்சாளர்கள் அதனை சிறப்பாக செய்தனர். பேட்டிங்கில் சற்று சுமாராக செயல்பட்டு ஒரு ரன்னில் தோற்றது வருத்தமளிக்கிறது.

போட்டியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்களில் காரணம் என்பதால் அடுத்த தொடரில் கண்டிப்பாக அவர்கள் ரன்களை குவிப்பார்கள்" என்று தோனி கூறினார்.

MS Dhoni on What They Got Wrong in IPL Finals and Returning Next Year

mumbai indians vs chennai super kings
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.