Skip to main content

ஐபிஎல் 2019: வெளியேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்!

delhi capitals

12-வது ஐபிஎல் கிரிக்கெட் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ் (18 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (18 புள்ளி), டெல்லி கேப்பிட்டல்ஸ் (18 புள்ளி), ஐதராபாத் சன்ரைசர்ஸ் (12 புள்ளி) ஆகிய அணிகள் "பிளே-ஆப்" சுற்றுக்கு முன்னேறின. 

இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் நேற்று மே 8 ஆம் தேதி இரவு நடந்த வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 4-வது இடம் பெற்ற ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. 

srh vs dc

இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டது. டெல்லி அணியில் காலின் இங்ராம் நீக்கப்பட்டு காலின் முன்ரோ சேர்க்கப்பட்டார். ஐதராபாத் அணியில் யூசுப் பதானுக்கு பதிலாக தீபக் ஹூடா இடம் பிடித்தார்.

இத எலிமினேட்டர் சுற்றில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.

dc vs srh

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி திரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் 4-வது பந்தில் அமித் மிஸ்ரா(1 ரன்) சர்ச்சைக்குரிய முறையில் ரன்-அவுட் ஆனதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்கிறது டெல்லி அணி. தோல்வி கண்ட ஐதராபாத் அணி வெளியேறியது.

சென்னையில் நேற்று முன்தினம் மே 7 ஆம் தேதி நடைபெற்ற முதலாவது தகுதி சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறியது.

dc vs sr h

2–வது தகுதி சுற்று: சென்னை vs டெல்லி

தற்போது இதில் வெற்றி பெற்றுள்ள டெல்லி அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாது.

நாளை 10–ந் தேதி நடைபெறும் 2–வது தகுதி சுற்று ஆட்டத்தில், முதல் தகுதி சுற்றில் தோல்வி அடைந்த சென்னை அணியுடன் மோத வேண்டும். 

2–வது தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

IPL: Delhi beat Hyderabad by 2 wkts in eliminator match

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.