Skip to main content

ஐபிஎல் 2019: துவக்க விழா ரத்து!

ஐபிஎல் 2019: துவக்க விழா ரத்து!

2019 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வருகின்ற மார்ச் 23 ஆம் தேதி துவங்குகிறது. எப்போதும் போல் அல்லாமல் இந்த ஆண்டு ஐபிஎல் 2019 ஆண்டிற்கான துவக்க விழா ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக துவக்க விழாவிற்கு என ஒதுக்கிய பணம், ஜம்முவின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 40 மத்திய ரிசர்வ் படை வீரர்களின் குடும்பங்களுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பண-நிறைந்த T20 லீக்கின் துவக்க விழாக்கள் எப்போதும் பாலிவுட் நட்சத்திரங்கள் சிறப்பம்சமாக நிகழ்த்திய நிகழ்ச்சிகளுடன் கவர்ச்சியாகவும் வண்ணமயமாகவும் இருக்கும்.

எனினும், நமது நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த 40 வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில், மார்ச் 23 தொடங்க உள்ள 12 வது ஐபிஎல் நிகழ்வின் துவக்க விழாவை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

"இந்த ஆண்டு நாங்கள் ஐபிஎல் போட்டிக்கான எந்த துவக்க விழாவும் நடைபெறாது, எனினும் அதற்கு ஒதுக்கப்பட்ட தொகை புல்வாமாவில் இரண்டு பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும்," என ஐபிஎல் நிர்வாகிகளின் தலைவரான வினோத் ராய் தெரிவித்தார்.

வெளிநாட்டு வீரர்களை உள்ளடக்கிய ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர், கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்தப் போட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 2008-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

ஐபிஎல் 2019: துவக்க விழா ரத்து!

12-வது ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் கடந்த 20-ம் தேதி (20.12.18) ஜெய்ப்பூரில் நடந்தது. அதிகபட்சமாக, தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ரூ.8.40 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதேவிலைக்கு, ஜெய்தேவ் உனத்கட்டை ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, மொஹித் சர்மா ரூ.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

ஏலம் நடந்து முடிந்த நிலையில், போட்டி எங்கே நடக்கும், எப்போது தொடங்கும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.  ஐபிஎல் போட்டியின் 12-வது சீசன் இந்தியாவில் வரும் மார்ச் மாதம் 23-ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஏப்ரல், மே மாதங்களில் பொதுத்தேர்தல், உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளதால், போட்டியை எங்கு நடத்துவது என்ற குழப்பம் இருந்தது. இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் போட்டியின் 12 வது சீசன் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை இந்தியன் ப்ரீமியர் லீக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, மார்ச் 23-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும் முதலிரண்டு வாரங்களுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஐ.பி.எல் தொடக்க போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

No IPL 2019 opening ceremony, allocated money will go to Pulwama martyrs' families

csk
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.