Skip to main content

ஐபிஎல் 2019: டெல்லி–ஐதராபாத் அணிகள் மோதும் எலிமினேட்டர் சுற்று!

srh vs dc

12-வது ஐபிஎல் கிரிக்கெட் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ் (18 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (18 புள்ளி), டெல்லி கேப்பிட்டல்ஸ் (18 புள்ளி), ஐதராபாத் சன்ரைசர்ஸ் (12 புள்ளி) ஆகிய அணிகள் "பிளே-ஆப்" சுற்றுக்கு முன்னேறின. 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் விசாகப்பட்டினத்தில் இன்று (May 8) இரவு நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்–ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி:

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகளுடன் 3–வது இடத்தை பிடித்து "பிளே–ஆப்" சுற்றுக்கு தகுதி பெற்றது. 

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை பயிற்சியாளராகவும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியை ஆலோசகராகவும் கொண்டுள்ள டெல்லி அணி பெயர் மாற்றம் செய்ததுடன், இந்த சீசனில் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் எழுச்சி பெற்றுள்ளது.

அத்துடன் 2012–ம் ஆண்டுக்கு பிறகு அந்த அணி முதல்முறையாக "பிளே–ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி:

2016–ம் ஆண்டு சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி லீக் சுற்றில் 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றது. 4–வது இடத்துக்கான போட்டியில் ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் ஒரே புள்ளியுடன் சமநிலை வகித்த போதிலும் ‘ரன்–ரேட்’ அடிப்படையில் ஐதராபாத் அணி 4–வது இடம் பிடித்து ‘பிளே–ஆப்’ சுற்றுக்குள் நுழைந்தது.

dc vs srh

ஐபிஎல் போட்டி வரலாற்றில் ஐதராபாத், டெல்லி அணிகள் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

தாக்குப்பிடிக்குமா ஐதராபாத்?

இதில் ஐதராபாத் அணி 9 முறையும், டெல்லி அணி 5 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. 

நடப்பு சீசனில் இரு அணிகளும் லீக் ஆட்டத்தில் 2 முறை சந்தித்தன.

இதில் முதலாவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியும், 2–வது ஆட்டத்தில் டெல்லி அணியும் வெற்றி பெற்றன.

டெல்லி அணியின் அதிரடி ஆட்டத்துக்கு முன்பு ஐதராபாத் அணி தாக்குப்பிடிக்குமா? என்பது சற்று சந்தேகம் தான்.

2–வது தகுதி சுற்று

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாது. 10–ந் தேதி நடைபெறும் 2–வது தகுதி சுற்று ஆட்டத்தில், முதல் தகுதி சுற்றில் தோல்வி அடைந்த சென்னை அணியுடன் மோத வேண்டும். 

2–வது தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி போட்டியை விட்டு வெளியேறும்.

IPL: Delhi Capitals to face Sunrisers Hyderabad today

dc vs sr h

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.