Skip to main content

ஐபிஎல் 2019 : புள்ளிப்பட்டியலில் சென்னை அணி மீண்டும் முதலிடம்!

IPL: Chennai Super Kings again leads the point table

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 50 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

டாஸ் வென்ற டெல்லி அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரின் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 179 ரன்கள் எடுத்தது.    

சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா 59 (37) ரன்கள் எடுத்தார். கேப்டன் தோனி 22 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார்.

csk vs dc

அடுத்து ஆடிய டெல்லி அணி 16.2 ஓவர்களில் 99 ரன்களுக்கு சுருண்டது. எனவே சென்னை அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்னாபிரிக்க ஸ்பின்னர் இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகளை எடுத்தார். தோனி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றி மூலம் சென்னை அணி 18 புள்ளிகள் பெற்று, புள்ளிபட்டியலில் டெல்லி அணியை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்தது.

சென்னை அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.   

delhi capitals

டெல்லி அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. எனவே 16 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை சென்னை அணியும், டெல்லி அணியும் பெற்றுள்ளதால், இவை இரண்டும் பிளே ஆப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

IPL: Chennai Super Kings again leads the point table

imran thahir

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.