Skip to main content

ஐபிஎல் 2019: ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது சென்னை !

chennai superkings qualify for playoffs

சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை சென்னை அணி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் 41-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் களமிறங்கினர்.

ஐபிஎல் 2019:

முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்துள்ளது. மணீஷ் பாண்டே இறுதிவரை ஆட்டமிழக்காமல் 83 ரன்களை எடுத்துள்ளார்.

இதையடுத்து, சென்னை அணிக்கு 176 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.

வாட்சன் அதிரடி:  52 பந்துகளில் 96 ரன்கள்

வாட்சன் 52 பந்துகளில் 96 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஸ்வர் குமார் பந்து வீச்சில் வெளியேறினார். இதில் 6 சிக்சர்களும் 9 பவுண்டரிகளும் அடங்கும்.

ஷேன் வாட்சன் T20 கிரிக்கெட்டில் 8,000 ரன்கள் எடுத்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

ஐபிஎல் 2019:

இதனையடுத்து 6 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ராயுடு 1 ரன்னும் 2 பந்தில் கேதர் ஜாதவ் சிக்சும் அடித்தார். ராயுடு 21 ரன்னில் வெளியேறினார்.

இந்நிலையில் 1 பந்து மீதம் உள்ள போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் புவனேஸ்வர் குமார், ரஷித் கான், சந்தீப் சர்மா தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

​shane watson    ​

IPL 2019: Chennai Super Kings Qualifies Play off round

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.