Skip to main content

ஐபிஎல் 2019: இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது மும்பை!

mumbai indians enters finals

ஐபிஎல் கிரிக்கெட்டின் முதலாவது தகுதி சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

12-வது ஐபிஎல் கிரிக்கெட் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ் (18 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (18 புள்ளி), டெல்லி கேப்பிட்டல்ஸ் (18 புள்ளி), ஐதராபாத் சன்ரைசர்ஸ் (12 புள்ளி) ஆகிய அணிகள் "பிளே-ஆப்" சுற்றுக்கு முன்னேறின. 

முதலாவது தகுதி சுற்று:

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு  (May 7) நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

mi vs csk

"டாஸ்" ஜெயித்த சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்து அடுத்து ஆட்டமிழந்தனர்.

பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) சென்னை அணி 32 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா (5 ரன்), ஷேன் வாட்சன் (10 ரன்) வெளியேறினர்.

இதைத்தொடர்ந்து அம்பத்தி ராயுடு, எம்.விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாகவும், அதேநேரத்தில் தவறான பந்துகளை தண்டிக்கும் விதத்தில் அடித்தும் ஆடினார்கள். அணியின் ஸ்கோர் 12.1 ஓவர்களில் 65 ரன்னை எட்டிய போது எம்.விஜய் (26 ரன்கள், 26 பந்து, 3 பவுண்டரி) ராகுல் சாஹர் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார்.

​   mi vs csk

இதனை அடுத்து கேப்டன் தோனி, அம்பத்தி ராயுடுவுடன் இணைந்தார். ஜெயந்த் யாதவ் வீசிய ஒரு ஓவரில் தோனி, அம்பத்தி ராயுடு தலா ஒரு சிக்சர் தூக்கினர். 17.1 ஓவர்களில் சென்னை அணி 100 ரன்னை எட்டியது. 

கடைசி ஓவரில் பும்ரா பந்து வீச்சில் தோனி, இஷான் கிஷனிடம் கேட்ச் ஆனதும் நடுவர் அவுட் என்று அறிவித்தார். ஆனால் டெலிவிஷன் ரீப்ளேயில் அது நோ-பால் என்று தெரியவந்ததால் தோனி தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்பட்டார்.

mumbai indians

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நடப்பு சாம்பியன் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. 

பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா (4 ரன்) தீபக் சாஹர் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையிலும், குயின்டான் டி காக் (8 ரன்) ஹர்பஜன்சிங் பந்து வீச்சில் பாப் டுபிளிஸ்சிடம் கேட்ச் கொடுத்தும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து இஷான் கிஷன், சூர்யகுமாருடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 13.2 ஓவர்களில் அந்த அணி 100 ரன்னை எட்டியது. இஷான் கிஷன் 31 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 28 ரன்கள் எடுத்த நிலையில் இம்ரான் தாஹிர் பந்து வீச்சில் போல்டு ஆனார்.

#CSKvsMI

அடுத்து களம் கண்ட குருணல் பாண்ட்யா (0) இம்ரான் தாஹிர் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.

இதைத்தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமாருடன் இணைந்தார். இருவரும் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். 18.3 ஓவர்களில் மும்பை அணி 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு 5-வது முறையாக முன்னேறியது. 

இரண்டாவது தகுதி சுற்று:

இன்று நடைபெறும் இரண்டாம் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணியுடன், வருகிற 10-ந் தேதி சென்னை அணி மோதும். அதில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும்.

IPL: Mumbai beat Chennai to enter final

 

mi vs csk
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.