Skip to main content

ஐபிஎல் 2019: இறுதிச்சுற்றுக்கு முதலில் தகுதி பெறப்போவது யார்?

csk vs mi playoff 1

12-வது ஐபிஎல் கிரிக்கெட் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ் (18 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (18 புள்ளி), டெல்லி கேப்பிட்டல்ஸ் (18 புள்ளி), ஐதராபாத் சன்ரைசர்ஸ் (12 புள்ளி) ஆகிய அணிகள் "பிளே-ஆப்" சுற்றுக்கு முன்னேறின. 

இதில் 4-வது இடத்திற்கான போட்டியில் ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் ஒரே புள்ளியுடன் சமநிலை வகித்த போதிலும் ரன்ரேட் அடிப்படையில் ஐதராபாத் அணிக்கு அதிர்ஷ்டம் அடித்தது.

#CSKvsMI

முதலாவது தகுதி சுற்று

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு (மே 7) அரங்கேறும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் டாப்-2 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்சும், சென்னை சூப்பர் கிங்சும் மோத உள்ளனர்.

இரண்டாவது தகுதி சுற்று

நாளை மே 8 ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது தகுதி சுற்றில் 3 மற்றும் 4 ஆம் இடங்களை பிடித்த டெல்லி அணியும்,  ஐதராபாத் அணியும் மோதவுள்ளனர்.

மும்பை அணியை எதிர்கொள்ளும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

சென்னை அணி

நடப்பு சாம்பியனான சென்னை அணி லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்விகளை சந்தித்ததுடன் முதல் அணியாக பிளே-ஆப் சுற்றை உறுதி செய்தது. 

ஆனால் சென்னை அணி இந்த சீசனில் மும்பை அணிக்கு எதிரான இரண்டு லீக் ஆட்டங்களிலும் தோல்வியே (37 ரன் மற்றும் 46 ரன் வித்தியாசம்) கண்டுள்ளது. 

எனவே முந்தைய தோல்விகளுக்கு பழிதீர்க்குமா? என்ற எதிர்பார்ப்போடு சென்னை ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

mumbai indians

மும்பை அணி

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் 9 வெற்றி, 5 தோல்வியை சந்தித்தது. இருப்பினும் ரன்ரேட்டில் அந்த அணி சென்னையை விட கொஞ்சம் மேலோங்கி நிற்கிறது.

பேட்டிங், பந்துவீச்சு என எல்லா வகையிலும் பலம் வாய்ந்த அணியாக மும்பை திகழ்வதால் இந்த ஆட்டத்தில் நிச்சயம் அனல் பறக்கும். நடப்பு தொடரில் மும்பை அணியின் சராசரி ரன்ரேட் பவர்-பிளேயில் 7.98 ஆகவும், மிடில் ஓவர்களில் 7.55 ஆகவும், கடைசி கட்டத்தில் 11.19 ஆகவும் இருக்கிறது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

இறுதிச்சுற்றுக்கு முதலில் தகுதி பெறப்போவது யார்?

இரண்டாம் வாய்ப்பு 

தோல்வி அடையும் அணி உடனடியாக வெளியேறாது. 

அந்த அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.

தோல்வி அடையும் அணி நாளை மே 8 ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது தகுதி சுற்றில் வெற்றி பெரும் அணியுடன் மோதும்.

IPL: First finalist to be decided today

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.