Skip to main content

ஐபிஎல் 2019: இரண்டாவது தகுதி சுற்றில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் இன்று மோதல்!

csk vs delhi capitals

12-வது ஐபிஎல் கிரிக்கெட் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ் (18 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (18 புள்ளி), டெல்லி கேப்பிட்டல்ஸ் (18 புள்ளி), ஐதராபாத் சன்ரைசர்ஸ் (12 புள்ளி) ஆகிய அணிகள் "பிளே-ஆப்" சுற்றுக்கு முன்னேறின. 

CSK VS DC

இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் மே 8 ஆம் தேதி இரவு நடந்த வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 4-வது இடம் பெற்ற ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.

சென்னையில் மே 7 ஆம் தேதி நடைபெற்ற முதலாவது தகுதி சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறியது.

CSK VS DC

இன்று மே 10–ந் தேதி நடைபெறும் 2–வது தகுதி சுற்று ஆட்டத்தில், முதல் தகுதி சுற்றில் தோல்வி அடைந்த சென்னை அணியுடன் டெல்லி அணி மோத உள்ளது.

இதில் வெற்றி பெறும் அணி வரும் மே 12 ஆம் தேதி நடைபெறும் இறுதி சுற்றில் மும்பை அணியுடன் மோதும். 

Delhi Fight the Inevitability of Yet Another MI-CSK Finale.

CSK VS DC

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.