Skip to main content

ஐபிஎல் 2019: 4 வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது மும்பை!

IPL

ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்சை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

12-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத் ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நேற்று இரவு அரங்கேறிய மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், 3 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

மும்பை அணியில் ஒரு மாற்றமாக ஜெயந்த் யாதவ் நீக்கப்பட்டு மெக்லெனஹான் சேர்க்கப்பட்டார். சென்னை அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

"டாஸ்" ஜெயித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். 

ipl 2019

சென்னை அணிக்கு 150 ரன்கள் இலக்கு!

20 ஓவர்களில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது.

பொல்லார்ட் 25 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 41 ரன்னும், ஜஸ்பிரித் பும்ரா ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர் 3 விக்கெட்டும், ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பாப் டுபிளிஸ்சிஸ், ஷேன் வாட்சன் ஆகியோர் களம் கண்டனர். 

அடுத்து களமிறங்கிய வீரர்கள் தொடர்ந்து வெளியேறிய நிலையில் ரவீந்திர ஜடேஜா, ஷேன் வாட்சனுடன் ஜோடி சேர்ந்தார்.

கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்டது.

mumbai indians vs chennai super kings

ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

கடைசி ஓவரை மலிங்கா வீசினார். நிலைத்து நின்று ஆடிய ஷேன் வாட்சன் (80 ரன்கள், 59 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) 4-வது பந்தில் ரன்-அவுட் ஆனார். கடைசி பந்தில் 2 ரன் தேவை என்ற நிலையில் ஷர்துல் தாகூர் (2 ரன்) எல்.பி.டபிள்யூ. ஆனார்.

20 ஓவர்களில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களே எடுத்தது. இதனால் மும்பை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை 4-வது முறையாக கைப்பற்றி சாதனை படைத்தது.

அந்த அணி 2013, 2015, 2017-ம் ஆண்டுகளிலும் கோப்பையை வென்று இருந்தது. இந்த சீசனில் சென்னை அணி இறுதிப்போட்டி உள்பட 4 ஆட்டங்களில் மும்பையிடம் வீழ்ந்தது.

வெற்றி பெற்ற மும்பை அணிக்கு பரிசு கோப்பையுடன் ரூ.28 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.

2–வது இடம் பெற்ற சென்னை அணிக்கு ரூ.14 கோடி பரிசாக அளிக்கப்படுகிறது. 

Mumbai beat Chennai by one run to win record 4th IPL title

ipl 2019
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.