Skip to main content

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் சரண் மனு தள்ளுபடி!!!

chidambaram surrender plea dismissed

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

சிதம்பரத்தின் இந்த மனுவை சிறப்பு நீதிபதி அஜய்குமார் குஹார் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
 
சிதம்பரம் சார்பில் வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார்.

இதையடுத்து, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க  விரும்பவில்லை எனவும், தேவைப்படும்போது அமலாக்கத்துறை காவலுக்கு விண்ணப்பிப்போம் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத் துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து தாக்கல் செய்துள்ள மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 

p chidambaram surrender plea dismissed
Tamil