Skip to main content

ஐசிசி உலகக்கோப்பை 2019:இந்திய அணி இன்று அறிவிப்பு!

இந்தியா

2019 ஆம் ஆண்டிற்கான ஐசிசி உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி இன்று ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (2019) இங்கிலாந்தில் மே 30 ஆம் தேதி முதல் ஜூலை 14–ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

இங்கிலாந்தின் 10 நகரங்களில் உள்ள 11 ஸ்டேடியங்களில் 48 ஆட்டங்கள் நடக்கின்றன.

ஐசிசி உலகக்கோப்பை 2019:

 

இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

icc world cup 2019

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு, இந்திய அணியை தேர்வு செய்து அறிவிக்கும். ஐபிஎல் தொடரில் வீரர்களின் விளையாடும் விதத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு தேர்வுக்குழு அணியை அறிவிக்கும் என்று சொல்லப்படுகிறது. 

சமீபத்தில் நடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த வீரர்களே பெரும்பாலும் உலக கோப்பை அணியிலும் தொடருவார்கள் என்று நம்பப்படுகிறது. ஓரிரு இடத்துக்கு மட்டுமே புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

ICC World Cup: Indian squad to be announced today

world cup

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.