Skip to main content

ஐசிசி உலகக்கோப்பை 2019: டாஸ் வென்றது தென் ஆப்பிரிக்கா!

ஐசிசி உலகக்கோப்பை 2019: டாஸ் வென்றது தென் ஆப்பிரிக்கா!

கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த 12 வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று மே 30 ஆம் தேதி துவங்கியது.

ஜூலை 14 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் 10 நகரங்களில் உள்ள 11 ஸ்டேடியங்களில் 48 ஆட்டங்கள் நடக்கின்றன.

ஓவல் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன. 

newzealand vs india warmup game

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

இதனை தொடர்ந்து இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்கிறது.  அந்த அணியின் ஜேசன் ராய் மற்றும் ஜானி பெயர்ஸ்டோ தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடுகின்றனர்.

தாஹிர் பந்துவீச்சில் ரன் எதுவும் எடுக்காமல் ஜானி பெயர்ஸ்டோ ஆட்டமிழந்தார். இது இங்கிலாந்து ரசிகர்களை பெரிதும் ஏமாற்றியது.

இந்த போட்டியில் காயத்தில் இருந்து முழுமையாக குணம் அடையாததால், இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் கலந்து கொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICC Cricket World Cup 2019: South Africa won the Toss and Choose to Bowl

dale steyn
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.