Skip to main content

ஐசிசி உலகக்கோப்பை 2019: இந்திய கிரிக்கெட் அணி ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிப்பு!

indian cricket team

2019 ஆம் ஆண்டிற்கான ஐசிசி உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (2019) இங்கிலாந்தில் மே 30 ஆம் தேதி முதல் ஜூலை 14–ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

இங்கிலாந்தின் 10 நகரங்களில் உள்ள 11 ஸ்டேடியங்களில் 48 ஆட்டங்கள் நடக்கின்றன.

ஆசிய துணைக் கண்டத்து ரசிகர்கள் இரவு 11 மணிக்குள் கிரிக்கெட் போட்டி ஆட்டங்களை டி.வி.யில் பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்று வரை எந்த பகல்–இரவு ஆட்டங்களிலும் விளையாடாத வகையில் போட்டி அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. 

icc world cup 2019

போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி தங்களது 9 லீக் ஆட்டங்களையும் 9 வகையான மைதானங்களில் விளையாடுகிறது. 

அந்த அணி தொடக்க ஆட்டத்தில் மே 30–ந் தேதி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட 10 நாடுகள் இந்த போட்டி தொடரில் பங்கேற்கின்றன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இப்போட்டி ஜூன் 5 ஆம் தேதி நடைபெறுகிறது. 

ஐ.பி.எல். போட்டிகள் முடிந்த சில தினங்களில் உலக கோப்பை தொடர் தொடங்க உள்ளது. உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வரும் 15 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு, இந்திய அணியை தேர்வு செய்து அறிவிக்கும். ஐபிஎல் தொடரில் வீரர்களின் விளையாடும் விதத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு தேர்வுக்குழு அணியை அறிவிக்கும் என்று சொல்லப்படுகிறது. 

icc world cup 2019

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.