Skip to main content

ஐசிசி உலகக்கோப்பை 2019: இங்கிலாந்து புறப்பட்ட இந்திய கிரிக்கெட் அணி!

ஐசிசி உலகக்கோப்பை 2019:

12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (2019) இங்கிலாந்தில் மே 30 ஆம் தேதி முதல் ஜூலை 14–ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

இங்கிலாந்தின் 10 நகரங்களில் உள்ள 11 ஸ்டேடியங்களில் 48 ஆட்டங்கள் நடக்கின்றன.

உலகக்கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

world cup

அணி விபரம் 

  1. விராட் கோலி (கேப்டன்),
  2. ரோகித் சர்மா,
  3. ஷிகர் தவான்,
  4. கே.எல்.ராகுல்,
  5. மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்),
  6. கேதர் ஜாதவ்,
  7. ஹர்த்திக் பாண்ட்யா,
  8. விஜய் சங்கர்,
  9. குல்தீப் யாதவ்,
  10. யுஸ்ந்திரா சாஹல்,
  11. ஜஸ்பிரித்  பும்ரா,
  12. புவனேஷ்வர் குமார்,
  13. முகமது ஷமி,
  14. ரவீந்திர ஜடேஜா,
  15. தினேஷ் கார்த்திக்.

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

இதற்கு மே 25 ஆம் தேதி நியூசிலாந்தையும், மே 28 ஆம் தேதி வங்கதேசத்தையும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா எதிர்த்து விளையாடுகிறது. 

Teamindia departs for England

இந்நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக, நேற்று மே 21 ஆம் தேதி நள்ளிரவு இந்திய வீரர்கள் இங்கிலாந்துக்கு புறப்பட்டனர். வீரர்களின் புகைப்படங்களை இன்று அதிகாலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

team india

வீரர்கள் புறப்படும்போது எடுத்த புகைப்படங்களை பிசிசிஐ இன்று அதிகாலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

team India

இந்த புகைப்படங்களில் வீரர்கள் உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் புறப்படுவது போன்று உள்ளனர்.

hardik pandya

மேலும் ரோகித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா, பும்ரா, சாஹல் உள்ளிட்டோரும் புறப்படும் முன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

Team India Departs for ICC World Cup 2019

team indiateam indiateam india

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.