Skip to main content

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: 17 பதக்கங்களுடன் இந்தியா நான்காவது இடம்!

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி:

23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் கடந்த 21 ஆம் தேதி துவங்கியது. இதில் கடைசி நாளான நேற்று ஏப்ரல் 24 ஆம் தேதி இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டியது.

​pu chitra

 

இரண்டாம் நாள் ஆட்டம் 

2-வது நாளில் ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 30 வயதான இந்திய வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 

இது அவரது சிறந்த ஓட்ட நேரமாகும். தங்கப்பதக்கம் வென்ற கோமதி தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார். இந்த போட்டி தொடரில் இந்தியா வென்ற முதல் தங்கம் இதுவாகும். 

gomathi marimuthu
#கோமதி மாரிமுத்து 

 

ஆண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீரர் தேஜிந்தர் பால்சிங் 20.22 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

ஈட்டி எறிதலில் இந்திய வீரர் ஷிவ்பால் சிங் 86.23 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

அத்துடன் அவர் வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் நடைபெறும் உலக தடகள போட்டிக்கு தகுதி பெற்றார்.

shotput
Tajinder Singh Toor 

 

1,500 மீட்டர் ஓட்டம்: தங்கப்பதக்கம்

நேற்றைய கடைசி நாளில், பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பி.யூ.சித்ரா 4 நிமிடம் 14.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

1,500 மீட்டர் ஓட்டம்: வெண்கலப்பதக்கம்

பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசாவைச் சேர்ந்த டுட்டீ சந்த் 23.24 வினாடிகளில் 3-வதாக வந்து வெண்கலப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.

1,500 மீட்டர் ஓட்டத்தின் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் அஜய் குமார் சரோஜ் வெள்ளிப்பதக்கத்தை (3 நிமிடம் 43.18 வினாடி) கைப்பற்றினார்.

23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி

 

தொடர் ஓட்டம் - வெள்ளிப்பதக்கம்

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டம் இரண்டிலும் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

இதில் ஆண்கள் அணியில் இடம் பெற்ற 4 பேரில் தமிழக வீரர் ஆரோக்ய ராஜீவும் ஒருவர்.

பதக்கம் வென்ற ஆரோக்ய ராஜீவ் திருச்சியை சேர்ந்தவர். ராணுவத்தில் பணியாற்றும் அவருக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி

4 நாள் நடந்த போட்டியின் நிறைவில் இந்தியா 3 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என்று மொத்தம் 18 பதக்கங்களை குவித்து பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது.

11 தங்கம், 7 வெள்ளி மற்றும் 4 வெண்கலங்களுடன் பஹ்ரைன் முதலிடத்தை பிடித்தது.

10 தங்கம், 13 வெள்ளி மற்றும் 7 வெண்கலங்களுடன் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.

5 தங்கம், 4 வெள்ளி மற்றும் 9 வெண்கலங்களுடன் ஜப்பான் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 

Asian Athletics Championships 2019: PU Chitra wins 1500m gold, India finishes with 17 medals with 4 th position.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.