Skip to main content

ஆசிய பங்குச்சந்தையின் நேர்மறையான குறிப்புகளினால் இந்திய பங்குச்சந்தைக்கு ஆதாயம்!

இந்திய பங்குச்சந்தை

ஆசிய பங்குச் சந்தையின் நேர்மறையான குறிப்புகளினால் இந்திய பங்குச் சந்தை ஆதாயத்தை எட்டியுள்ளது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 162.03 புள்ளிகள் அதிகரித்து 36,033.51 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிப்டி 38.45 புள்ளிகள் அதிகரித்து 10,830.10 புள்ளிகளில் உள்ளது.

பிப்ரவரி 15 க்குப் பின் முதன் முறையாக சென்செக்ஸ் 36,000 புள்ளிகளை கடந்துள்ளது.

நிதியியல், ஆட்டோ, மற்றும் ஐடி பங்குகள் சந்தையில் ஆதாயத்தை எட்டியுள்ளன. சந்தை ஆய்வாளர்கள் முக்கிய பொருளாதார தரவுகளுக்காக காத்திருக்கின்றனர். காலை 9.24 மணியளவில், சென்செக்ஸ் 136.59 புள்ளிகள் உயர்ந்து 36,008.07 புள்ளிகளில் உள்ளது. நிப்டி 25.70 புள்ளிகள் உயர்ந்து 10,817.35 புள்ளிகளில் உள்ளது.

nifty

நிப்டியில் JSW ஸ்டீல், டாடா மோட்டர்ஸ், அல்ட் ரா டெக் சிமிண்ட், வேதாந்தா, மற்றும் டாட்டா ஸ்டீல், ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் வர்த்தகம் 1.02 சதவீதம் மற்றும் 2.19 சதவீதம் உயர்ந்துள்ளது.

இந்திய உள்நாட்டு சந்தைகள் அமெரிக்க ஆசிய சந்தைகளில் இருந்து கிடைத்த நேர்மறைக் குறிப்பை ஏற்றமாக பிரதிபலித்துள்ளது. ஜப்பானுக்கு வெளியே ஆசிய -பசிபிக் பங்குகள் 0.5 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜப்பானின் நிக்கேய் பங்குச் சந்தை 0.6 சதவீதம் உயர்ந்துள்ளது.

Market Live: Sensex up over 150 pts, Nifty around 10,850; IT, pharma stocks in focus

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.