Skip to main content

ஆசிய குத்துச்சண்டை: இறுதிச்சுற்றுக்கு ஆறு இந்திய வீரர்கள் தகுதி!

ஆசிய குத்துச்சண்டை

தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று ஏப்ரல் 25 ஆம் தேதி நடந்த ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவு அரை இறுதியில் இந்திய வீரர்கள் ஆறு பேர் தகுதிபெற்றுள்ளனர்

ஆடவர் குத்துச்சண்டை: 

75 கிலோ எடைப்பிரிவு:

இந்திய வீரரான ஆஷிஷ் குமார் (75 கிலோ), ஈரானின் செயெத்ஷஹின் மொய்சாவியை சாய்த்து இறுதிசுற்றுக்கு முன்னேறினார்.

52 கிலோ எடைப்பிரிவு:

அமித் பன்ஹால் 3-2 என்ற கணக்கில் சீனாவின் ஹூ ஜியான்குனை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

amit panghal
Amit Panghal

65 கிலோ எடைப்பிரிவு:

65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் கவிந்தர் சிங் பிஸ்த் 3-2 என்ற கணக்கில் மங்கோலியா வீரர் எங்க் அமர் காக்ஹூவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

49 கிலோ எடைப்பிரிவு:

49 கிலோ பிரிவில் இந்தியாவின் தீபக் சிங் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். அரை இறுதியில் அவரை எதிர்த்து போட்டியிட இருந்த கஜகஸ்தான் வீரர் தெமிர்டாஸ் சுஸ்சுபோவ் காயம் காரணமாக விலகியதால் போட்டியின்றி தீபக் சிங் முன்னேறினார். 

ஆசிய குத்துச்சண்டை
Kavinder Singh

மகளிர் குத்துச்சண்டை :

81 கிலோ எடைப்பிரிவு:

பெண்களுக்கான 81 கிலோ பிரிவின் அரைஇறுதியில் இந்தியாவின் பூஜா ராணி 5-0 என்ற கணக்கில் கஜகஸ்தானின் பாரிஜாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

64 கிலோ எடைப்பிரிவு:

இந்தியாவின் சிம்ரன்ஜித் கவுர் (64 கிலோ) 5-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் மப்துனாஹோன் மெலிவாவையும் எளிதில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார்.

ஆசிய குத்துச்சண்டை

இறுதிப்போட்டியை எட்டிய 6 இந்தியர்களும் குறைந்தது வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

இந்தியர்கள் 6 பேர் இறுதி போட்டிக்கு தகுதிபெற்றுள்ளதால் இந்தியாவிற்கு 6 வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.

7 வெண்கலப்பதக்கம்

அதேசமயம் 60 கிலோ பிரிவில் இந்திய வீரர் ஷிவ தபா 2-3 என்ற கணக்கில் கஜகஸ்தானின் ஜாகிர் சப்ருலினிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெண்கலப்பதக்கம் பெற்றுள்ளார். 

ஆஷித் (69 கிலோ), சதீஷ்குமார் (91 கிலோவுக்கு மேல்), சரிதா தேவி (60 கிலோ), மனிஷா (54 கிலோ), நிகாத் ஜரீன் (51 கிலோ), சோனியா சாஹல் (57 கிலோ) ஆகிய இந்தியர்களும் தங்களது அரைஇறுதியில் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கம் பெற்றனர்.

Six Indians storm into finals of Asian Boxing Championships

ஆசிய குத்துச்சண்டை

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.