Skip to main content

ஆசிரியர் தகுதி தேர்வு காரணமாக தமிழகத்தில் பி.எட் தேர்வு ஒத்திவைப்பு ‍

tet

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுவதால், ஜூன் 8 ஆம் தேதி நடக்கவிருந்த பி.எட் தேர்வு தேதி மாற்றம் செய்யப்படுவதாக உயர்கல்வித்துறை முதன்மை செயலர் மங்கத்ராம் சர்மா தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை, முதுநிலை தேர்வுகள் இம்மாதம் 29 ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 13 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

ஆசிரியர் படிப்பில் இரண்டாமாண்டு இளநிலை மாணவர்கள் "ஆசிரியர் தகுதி தேர்வு" எழுத தகுதியுடையவர்கள் ஆவர். 

teacher eligibility test

 

இதனிடையே, தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதிகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜூன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் டெட் தேர்வுகள் நடைபெறுகிறது. 

ஏற்கனவே, அந்த தேதிகளில் பல்கலைக்கழகத் தேர்வும் நடைபெறுகிறது. இரு தேர்வுகளும் ஒரே நாளில் நடப்பதால், தேர்வு தேதிகளை மாற்றியமைக்குமாறு மாணவர்கள் வலியுறுத்தினர். 

இந்நிலையில், மாணவர்களின் நலன்கருதி ஜூன் 8 ஆம் தேதி நடக்கவிருந்த பி.எட் தேர்வு தேதி மாற்றம் செய்யப்படுவதாகவும், 8 ஆம் தேதி நடைபெறும் தேர்வு 13 ஆம் தேதி நடைபெறும் என்றும் உயர்கல்வித்துறை முதன்மை செயலர் மங்கத்ராம் சர்மா தெரிவித்துள்ளார்.

B.Ed exam postponed to help students write TET

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.