Skip to main content

8 ஆயிரம் ரன்களை கடந்து ரோகித் சர்மா புதிய சாதனை!

ROHITH SHARMA

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா 46 ரன்கள் எடுத்த போது, ஒரு நாள் கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்த 31-வது வீரர், இந்திய அளவில் 8-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். ரோகித் சர்மா இதுவரை 206 ஆட்டங்களில் விளையாடி 22 சதம், 41 அரைசதத்துடன் 8,010 ரன்கள் எடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 
35 ரன்கள் விதியசத்தில் தோல்வி அடைந்த இந்திய அணி தொடரை 2-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணிக்கு தாரைவார்த்தது.

இந்த தொடரில் 2 சதம், 2 அரைசதத்துடன் மொத்தம் 383 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்த ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருது இரண்டையும் தட்டிச் சென்றார்.

aron finch

இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணி 9-வது முறையாக நேரடி ஒரு நாள் தொடரில் விளையாடி அதில் வென்ற 5-வது தொடர் இதுவாகும்.

5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஒரு அணி 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருந்து அதன் பிறகு எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தொடரை வசப்படுத்துவது இது 4-வது நிகழ்வாகும்.

india vs aus

ஏற்கனவே தென்ஆப்பிரிக்கா (2 முறை), வங்காளதேசம் ஆகிய அணிகள் இச்சாதனையை செய்துள்ளன. இந்த வரிசையில் ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.

சொந்த மண்ணில், விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி ஒரு நாள் தொடரை இழந்தது இது தான் முதல்முறையாகும்.

Rohith Sharma became the 51 st player to cross 8,000 runs in ODI

india vs australia
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.