Skip to main content

8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை குறித்து மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் ‍- மத்திய அரசு!

8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து - மாநிலங்களவையில் தீர்மானம்!!!

பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிப்பதை ரத்து செய்யும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அளிப்பதை ரத்து செய்த விவகாரத்தில், மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம்," 8 ஆம் வகுப்புவரை எந்த மாணவரையும் "பெயில்" ஆக்குவதற்கு தடை விதிக்கிறது".

அதனால் கட்டாய இலவசக் கல்விச் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. அவை மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டு விட்டதால் குடியரசுத் தலைவர் கையொப்பமிட்டதும் சட்டமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 8 ஆம் வகுப்பு வரை எந்த மாணவரையும் பெயில் என அறிவித்து, படித்த வகுப்பிலேயே மீண்டும் படிக்க வைக்கும் முறை இல்லை.

ஆனால், இந்த புதிய சட்டப்படி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் ஆண்டு இறுதியில் நடைபெறும் முழு ஆண்டு தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மறுதேர்வு எழுதும் வாய்ப்பு ஒன்று வழங்கப்படும்.

அதிலும் தேர்ச்சி அடையாவிட்டால் அதே வகுப்பிலேயே மீண்டும் படிக்க வேண்டும். அதேநேரம் இந்த விவகாரத்தில் மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Parliament approves Bill to abolish ‘no detention policy’ till Class 8

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.