Skip to main content

700 கோடி வசூலைத் தாண்டிய ரஜினியின் "2.0"

ரஜினியின் 2.0

புதிய வெளியீடுகள் இருந்த போதிலும், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தில் உள்ளது. வெளியான மூன்றாவது வாரத்திலேயே 2.0 திரைப்படம், வெற்றிகரமாக உலகம் முழுவதும் வசூலில் 700 கோடியைக் கடந்துவிட்டது.

உலகம் முழுவதும் வெளியிடப்பட்டிருக்கும் ரஜினிகாந்தின் 2.0 திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஹீரோவாக ரஜினியும் வில்லன் கேரக்டரில் அக்ஷய் குமாரும் நடித்திருக்கின்றனர்.

2.0 இன் ஹிந்தி பதிப்பில் மட்டும் 183.75 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறது.

வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா 2.0 இன் சமீபத்திய பாக்ஸ் ஆஃபீஸ் புள்ளி விவரங்களை பகிர்ந்துள்ளார். உலக அளவில், இந்தியாவில் 565 கோடி ரூபாய் மற்றும் வெளிநாட்டில் 140 கோடி ரூபாய் ஆக மொத்தம் 705 கோடி ரூபாய் என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

தற்போது இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள ஷாருக்கானின் ஜீரோ, வருண் தேஜின் ஸ்பேஸ் ட்ராமா, அந்தரிக்ஷாமின் 9000 கேஎம்பிஹச் மற்றும் தனுஷின் மாரி 2 ஆகிய படங்களுடன் 2 .0 வும் வெற்றிகரமாக திரையில் ஓடுவதற்கு வலுவான வாய்ப்புகள் உள்ளன.

2.0 திரைப்படம் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த எந்திரனின் தொடர்ச்சியாகும். நடிகர் ரஜினிகாந்த், வசீகரன் மற்றும் சிட்டி என மீண்டும் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அக்க்ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டு மே மாதம் சீனாவில் வெளியிடுவதன் மூலம், உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் மேலும் முதலிடம் பெற 2.0 முயற்சித்து வருகிறது.

Rajinikanth starrer 2.0 crosses Rs 700 crore mark

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.