Skip to main content

7 வது முறையாக 150+ ரன்களை அடித்து ரோஹித் சர்மா புதிய சாதனை !!!

7 வது முறையாக 150+ ரன்களை அடித்து ரோஹித் சர்மா புதிய சாதனை !!!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் ரோகித் சர்மா 162 ரன்களை குவித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். 
 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது 152* ரன்களை விளாசினார். அப்போதே 6வது முறை 150+ அடித்து 150 க்கு மேல் ரன் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார்.

இந்நிலையில் இன்று நடைப்பெற்று வரும் 4 வது ஒருநாள் போட்டியிலும் ரோகித் சர்மா 162 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் 7 முறை 150+ ரன்களை அடித்த வீரர் என்ற பட்டியலில் அசைக்க முடியாத முதல் இடத்தைப் பிடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். 

150+ மேல் ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியல்:

1.ரோகித் சர்மா (7)
2.சச்சின் டெண்டுலகர் / டேவிட் வார்னர் (5)
3.ஜெயசூரியா / கிறிஸ் கெய்ல் / ஹசிம் ஆம்லா (4)

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அதிக ரன்களை எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் இந்திய அணி 50 ஒவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு, 377 ரன்கள் எடுத்து மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கடினமான இலக்கை நிர்ணயித்துள்ளது.

Rohith sharma becomes the first cricketer to score 150+ runs for the 7 th time

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.