Skip to main content

59 தொகுதிகளில் நாளை இறுதி கட்ட மக்களவை தேர்தல்!

7 ஆம் கட்ட தேர்தல்

உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் மே 19 ம் தேதி 7 ஆம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த 7 ஆம் கட்ட தேர்தலில் ஆறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 59 பாராளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

7 th phase election

7 ஆம் கட்ட மக்களவை தேர்தல் - மே 19 - மொத்தம் 59 தொகுதிகள் 

1. பீகார் - 8 தொகுதிகள்.
2. ஜார்க்கண்ட் - 3 தொகுதிகள்.
3. மத்திய பிரதேசம் - 8 தொகுதிகள். 
4. பஞ்சாப் - 13 தொகுதிகள்.
5. மேற்கு வங்கம் - 9 தொகுதிகள்
6. சண்டிகர் - ஒரு தொகுதி
7. உத்தர பிரதேசம் - 13 தொகுதிகள்
8. இமாசல பிரதேசம் - 4 தொகுதிகள்

7 th phase election

இதனுடன் தமிழகத்தில் விட்டுப்போன திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை அனைத்தும் மே 23 ஆம் தேதி எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை (May 19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. 7-வது இறுதிக்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்ததும், மாலை 6 மணிக்கு பின்னர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

All Arrangements Put in Place for Last Phase of LS Polls Tomorrow (May 19)

7 th phase election

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.