Skip to main content

500 மில்லியன் கால்நடைகளுக்கு தடுப்பூசி திட்டம்!!!

narendra modi

2024 ஆம் ஆண்டு வரை ஐந்தாண்டு காலத்திற்கு 12,652 கோடி ரூபாய்க்கு 100 சதவீத நிதியுதவியுடன், கோமாரி நோய்க்கு எதிராக கால்நடைகள், எருமை, செம்மறி ஆடு, ஆடு மற்றும் பன்றிகள் உள்ளிட்ட 500 மில்லியனுக்கும் அதிகமான கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவதை தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டு திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் கால்நடைகளுக்கான நோய் தடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து உரையாற்றினார்.

கால்நடைகளின் கால் மற்றும் வாய்களில் ஏற்படும் கோமாரி நோயினை (FMD), புருசெல்லோசிஸை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டு திட்டத்தினை செப்டம்பர் 11 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

cow

பின்னர் அப்பகுதியில் நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்படிருந்த இடத்தில், மோடி குப்பைகளில் இருந்து நெகிழிப் பைகளை எடுத்துக் கொண்டிருந்த நெகிழிப் பொருட்கள் சேகரிப்பு பெண்களை சந்தித்து பேசி, அவர்களுக்கு உதவிகரம் நீட்டினார். இதையடுத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

அக்டோபர் 2-ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் நடவடிக்கையில் அனைவரும் ஈடுபட வேண்டும். 

மகாத்மா காந்தி பிறந்த தினமான அன்று முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முழுமையாக நாம் தடை செய்வோம்.

500 மில்லியன் கால்நடைகளுக்கு தடுப்பூசி திட்டம் - துவக்கிவைத்தார் பிரதமர்.

வீடு, அலுவலகம், பணிபுரியும் இடம் என அனைத்துப் பகுதிகளிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு விடை கொடுப்போம். சுய உதவிக்குழு, சமூக அமைப்புகள், தனிநபர் என பல்வேறு தரப்பினரும் இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். 

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு முழுமையாக விடை கொடுப்போம் என பிரதமர் உரையாற்றினார்.

PM Modi launches slew of schemes for farmers, programme to vaccinate 500 million livestock

Tamil